பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

220


கைதாகியிருந்தனர். மறியல் களத்தின் இடத்தை மாற்றலாமா என்றும் யோசிக்கப்பட்டது. திருச்சி மாநாடுகட்கு முதல் நாள் நள்ளிரவு, பெரியாரின் கார் ஜப்தி செய்யப்பட்டது. தொண்டர்களை வழியில் இறக்கிவிட்டு, 1 மணியளவில் போலீசார் காரைப் பறித்தனர். 9. 12.30 அன்று அண்ணாவின் “திராவிட நாடு” அலுவலகத்திலிருந்து காகிதக் கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. திருச்சியில் இருவரும் அபராதம் கட்ட மறுத்துச் சிறை ஏகினரல்லவா? அதன் தொடர் நடவடிக்கையாம் இது!

டிசம்பர் 10-ஆம் நாள் “விடுதலை” ஆசிரியர் குருசாமி சென்னையில் மறியலில் குதித்துக் கைதாகிப், பின்னர் விடுதலை செய்யப்பட்டார் 14-ந் தேதி வகுப்புரிமை நாள் கொண்டாடி முடிக்கு முன், 15.12.50 அன்று மத்திய உள்துறை மந்திரி, இரும்பு மனிதர் வல்லபாய் பட்டேல், காலமான துயரச் செய்தி கிட்டிற்று. பார்ப்பனரல்லாதவரென்பதால் அவரிடம் பெரியாருக்கு அளவற்ற மதிப்பு! மேலும், வகுப்புரிமை கோரிப் பெரியார் போராடுவது அறிந்து, அவரே முயன்று. அரசியல் சட்டத்தில் தேவையான திருத்தம் செய்து கொள்ள ஏற்பாடு மேற்கொண்டிருந்தார். பட்டேல் மறைவையொட்டி மறியல் போராட்டம் 3 நாளைக்கு நிறுத்தி வைக்கப்பட்டது.

பட்டேல் இடத்துக்காகவே காத்திருந்தது போல் இராஜாஜி, 26-ஆம் தேதி உள்துறை அமைச்சரானார். இந்த நேரத்தில்தான் பெங்களூர் எல்.எஸ். ராஜா என்ற அய்யங்கார் வக்கீல் மீது சாட்டப்பெற்ற கிரிமினல் குற்றத்திலிருந்து அவரைத் தப்புவிக்க, அனந்தசயனம் அய்யங்காரும் ராஜாஜியும் தங்கள் பதவியைப் பயன்படுத்திக் கிரிமினல் புரொசீஜர்கோடையே திருத்துவதற்கு முயன்றனராம்.

அன்றைய தினம் பெரியாரின் கார் திருச்சியில் 835 ரூபாய்க்கு ஒருவரால் ஏலத்தில் எடுக்கப்பட்டது. கழகத் தோழர்கள் அந்த ரூபாய் கொடுத்து, அதைத் திரும்பவும் வாங்கி, மேலும் 750 ரூபாய் செலவில் பழுது பார்த்து, 14.1.51 பொங்கலன்று பெரியாரிடமே வழங்கினர். 1951-ஆம் ஆண்டின் துவக்க நாளே வடநாட்டுத் துணிக்கடை மறியலின் 73-வது நாள். அதுவரை சென்னையில் 312 பேரும் வெளியூர்களில் 20 பேரும் கைதாகியிருந்தனர். ஏராளமான வெளியூர்த் தோழர்கள் தமது சொந்தச் செலவில் சென்னை வந்து மறியலில் கலந்து கொள்ள முந்தினர். ஆனால் ஓரணிக்கு இரண்டிரண்டு பேர்தான் என்று திட்டமிடப்பட்டிருத்தது. பொங்கல் திருநாளை ஒட்டி மறியல் 5 நாள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மீண்டும் மறியல் போராட்டம் துவங்கியதும், பெரியாரே மறியலில் ஈடுபட்டுக் கைதாகிப், பின் விடுதலை செய்யப்பட்டார். திராவிடர் கழகத்தின் வெற்றி என்பதாக 20.3.51 “விடுதலை” ஒரு தலையங்கம் எழுதியிருந்தது கட்டாய இந்தி ஒழிக்கப்-