பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

236


 மெமோரண்டத்தின் படி ஆயுள்கால உறுப்பினர்கள்:- ஈ. வெ. ராமசாமி, தி.பொ. வேதாசலம், ஈ.வெ.ரா.மணியம்மையார், ஏ.என். நரசிம்மன் (ஆனைமலை), ஈ. திருநாவுக்கரசு (வேலூர்); தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாக சபை உறுப்பினர்கள்:- எஸ்.குருசாமி, வி. வீராசாமி, தஞ்சை ஆர். சொக்கப்பா மற்றும் ஐந்து பேர்:- ஆனைமலை ஏ.சி. ராமகிருஷ்ணம்மாள், நாகரசம்பட்டி, விசாலாட்சி அம்மாள். நாகரசம்பட்டி என்.எஸ். சம்பந்தம், திருச்சி வி. ராமச்சந்திரன், திருச்சி எம்.எஸ் சுந்தரம், ஸ்தாபன சொத்து 3 முதல் 4 லட்சம் ரூபாய் வரை; ஆண்டு வருமானம் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை,

பெரியாருடைய வாழ்க்கையில் ஈரோடு, திருச்சி சென்னை தவிர, ஏதாவது வேறொரு ஊருக்கு அவர் அதிகமான தடவைகள் போயிருக்கிறார் என்றால், அந்தச் சிற்றூர் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நாகரசம்பட்டிதான்! 1967-ல் அண்ணா முதல்வராகி அங்கு விழாவில் கலந்து கொள்ளச் சென்றபோது பெரியார், இதுவரையில் இது என்னுடைய ஊர். இனி இது உங்களுடைய ஊர் என்றே கூறினார். சேனைத் தலைவர் எனப்படும் சிறுபான்மைச் செட்டியார் வகுப்பைச் சார்ந்த மிகப் பெரிய சுற்றமுள்ள ஒரு குடும்பமே அங்கு தன்னைத் தந்தை பெரியாருக்கு அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. அதில் சிறந்த என்.வி. சுந்தரம் மூத்த சகோதரர். இவர் தங்கை என்.வி, விசாலாட்சி அம்மாள், இயக்கத்தின் சகல நடவடிக்கைகளிலும் பங்குபெற்றவர். சுந்தரம் அவர்களின் மூத்தமகன், 8.10.1926-ல் பிறந்த சம்பந்தம்.

கே. ராஜாராமும் இவரும் ஒன்றாக அ.ஆ. படிக்கத் தொடங்கி, சேலம் கல்லூரி வரை சென்றவர்கள். இயக்கத்தில் வெளியே தெரியக்கூடிய பொறுப்பு என்றால் பெரியார் சுயமரியாதைப் பிரச்சாரஸ்தாபனத்தின் உறுப்பினர் 1949 முதல் இன்று வரை, “விடுதலை“ மேனேஜர் 1.11.1970 முதல் இன்றுவரை. ஆனால் தன் பெயரை வெளியில் காட்டிக்கொள்ளாமல், பெரியாரின் நிழலாக எப்போதும் உடனிருந்தவர். முக்கியமாகப் பெரியார், மருத்துவ மனைகளில் உடல் நலிவுற்றிருக்கும் போது, இவர் கட்டாயம் அங்கிருப்பார்.

பெரியாரைப் புரிந்து கொண்டவர்கள் இரண்டு வகையினர், பேச்சையும் எழுத்தையும் பார்த்துக் கேட்டுப் படித்துப் புரிந்து கொள்பவர் பலர். ஆனால் அவரது ஒவ்வோர் அங்க அசைவு அல்லது முக்கல் முனகல் போன்றவைகளுக்கும் பார்வைக்கும் பொருள் புரிந்து செயல்படுவோர் மிகமிகச் சிலர்; அந்த சிலரிலும் சிறப்பானவர் இந்தச் சம்பந்தம். அற்புதமான நினைவாற்றல் இவரது தனித்திறன். பெரியார்