பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

237

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


 சம்பந்தப்பட்ட கழகக் காரியங்களில் இவரறியாதது ஏதுமில்லை . இன்றைக்கும் உட்கார்ந்த இடத்திலிருந்தே பல காரியங்களை இயக்கி வருகின்ற சூத்திரதாரி இவரென்பதை நெருங்கிப் பழகிய சிலர் நன்கறிவார்கள். அதனால் வேறுவகையில் பாதிக்கப்பட்ட சிலருக்கு இவரைக் கண்டால் வெறுப்பு!

நான்கு பெண்மக்களுக்குத் தந்தை. விபத்தில் இடுப்பில் ஏற்பட்ட ஊனம், அதிகம் நடமாடமுடியாத நிலை, எனினும் ஊக்கம் குறைவதில்லை. நண்பர்களும் நல்லுரை நாடுவோரும் ஏராளம். சுற்றம் பெரிதும் கற்றறிந்தார் கூட்டமே!

பெரியார் தொண்டராக மட்டுமில்லாமல், மணியம்மையாருடைய காலத்திலும், இளையவரான வீரமணி காலத்திலும் தனது பணிகளை எப்போதும் போல் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்ட பிறகு, இனித் திராவிடர் கழகம் இயங்காது, என விஷமிகள் பிரச்சாரம் செய்தனராம். இதற்குப் பெரியார் அரியதோர் உதாரணம் கூறினார்; “துணியில் ஒன்று நீட்ட நூல்; மற்றொன்று குறுக்குநூல்; இரண்டுமிருந்தால்தான் துணியென்று பேர். நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் சேர்ந்து பெற்ற குழந்தைதான் திராவிடர் கழகம். இறுதி இலட்சியத்தில் சுயமரியாதை இயக்கத்துக்கும், திராவிடர் கழகத்துக்கும் எந்தவிதமான மாறுதலும் கிடையாது. சுயமரியாதைக் கொள்கைகளைக் கொண்டிராத தனித்திராவிட ஆட்சியைச் சுயமரியாதைக்காரர்கள் ஏற்க மாட்டார்கள். வைதிகத்திலும் மூடநம்பிக்கையிலும் மூழ்கிய தனித்திராவிட ஆட்சியைத் திராவிடர் கழகத்தார் விரும்பமாட்டார்கள்.

திராவிட நாடு கிடைத்த பிறகு திராவிடர் கழகம் கலைக்கப்படும் அவசியம் ஏற்பட்டாலும் ஏற்படலாம்; ஆனால் கடைசி மூட நம்பிக்கைக்காரன் இந்த நாட்டில் இருக்கின்ற வரையில் சுயமரியாதை இயக்கத்துக்கு வேலை இருக்கிறது! சுய மரியாதை இயக்கம் அரசியல் நாற்றம் இல்லாதது. சர்க்கார் ஊழியர் உள்ளிட்ட எவரும் இதில் கலந்து கொள்ளலாம். இது திராவிடர் கழகத்துக்கு உற்ற துணையாக இருந்து வரும். இதிலுள்ள உறுப்பினர் யாவரும் திராவிடர் கழகத்திலும் உறுப்பினராயிருக்க வேண்டுமென்ற கட்டாயமில்லை.

சுயமரியாதைக் கொள்கைகளைப் பிடிக்காத சிலர் ஜஸ்டிஸ் கட்சியிலிருந்தார்களே தவிரத், திராவிடர் கழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக இருப்பவர்கள், சுயமரியாதைக் கொள்கைகளை அலட்சியப் படுத்தாததால்தான், சுயமரியாதைக் கொள்கைப் பிரச்சாரத்தைக் திராவிடர் கழக மேடைகளிலேயே செய்து வந்தார்கள்” என்றார்.

பெரியாரின் அரிய இந்த விளக்கத்துக்குப் பிறகு விஷமிகள் வாயடைத்துப் போயிற்று. 1953-ஆம் ஆண்டுத் துவக்கத்தில்,