பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

238


 பெரியாருக்குச் சிறிது உடல் நலமில்லை. எல்லாம் இரண்டொரு நாள்தான். சென்னை பெரம்பூரில், 1953-ஜனவரி இரண்டாம் நாள், தென்பகுதி ரயில்வே மென் யூனியனைத் தொடங்கிவைத்தார். எஸ், ராகவானந்தம், வி.வீராசாமி, என்.ஜீவரத்தினம் உடன் கலந்து கொண்டனர். ஆந்திர மாகாணம் சென்னையிலிருந்து பிரிந்து போகும் சூழ்நிலை உருவாகிவிட்டது. சென்னை மாநகரம் யாருக்கு என்ற வினாக்குறி விசுவரூபமெடுத்து நின்ற நேரம். புகழ் வாய்ந்த சென்னை ராயப்பேட்டை லட்சுமிபுரம் யுவர் சங்கம் பெரியாரை அழைத்து, 5.1.53 அன்று, ஆந்திரப்பிரிவிளை குறித்து அவர் கருத்தைப் பேசுமாறு வேண்டிற்று. ஆந்திரப் பிரிவினை பற்றித் திராவிடர் கழக மத்தியக் கமிட்டி 11-ஆம் நாள் கூடிக் கலந்து பேசியது. 12-ஆம் நாள் சென்னைப் பச்சையப்பன் கல்லூரித் தமிழ் மன்றத்தில் பேசும்போது, அந்நியர் சுரண்டலையும் ஆதிக்கத்தையும் தவிர்க்கவே தாம் தனிதாடு கேட்பதாகப் பெரியார் விரிவுரை நிகழ்த்தினார். பொங்கல் விழாச் செய்தியாக, மக்கள் எல்லாரும் கைத்தறி ஆடைகளை அணிந்து நெசவாளர்களை ஆதரிக்க வேண்டும் என்றும், மதச்சின்னங்களான நெற்றிக்குறி இடுதலை அனைவரும் தவிர்க்க வேண்டும் என்றும், பெரியார் அன்பும் கனிவும் பொங்கிடத் தமிழ் மக்களைக் கேட்டுக் கொண்டார்.

பெரியார் சுற்றுப் பயணங்களில், குடி அரசுப் பதிப்பக வெளியீடுகளுடன் திருக்குறள் மலிவுப் பதிப்பும் கிடைக்குமென்ற விளம்பரங்கள் இப்போதெல்லாம் “விடுதலை” நாளேட்டில் வெளிவந்தன. போலீஸ்காரர்கள் சங்கம் அமைத்ததை முதலமைச்சர் ராஜாஜி விரும்பவில்லை. கடுமையான அடக்குமுறை நடவடிக்கை எடுத்து, அதைக்கலைக்குமாறு செய்துவிட்டார். போலீசாரே அடி உதை வாங்கிய நிலைமையை அன்று நாடு கண்டது. பெரியாருடைய தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் நடைமுறைப் படுத்தப்படலாம் என, மந்திரிசபை அமைத்திருந்த ஓர் ஆராய்ச்சிக்குழு அறிவித்திருந்தது. முந்திய அமைச்சரவையின் இந்த ஏற்பாட்டை ஆச்சாரியார் ஒழித்தார். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் வடிகட்டும் பன்னாடை முறை (செலக்ஷன் தேர்வு) முந்திய அமைச்சரவையால் நிறுத்தப்பட்டதை, ஆச்சாரியார் மீண்டும் உயிர்ப்பித்தார். சலவைத் தொழிலாளர் தமது குலத் தொழிலையே செய்து வரவேண்டும் என்றார். மருத்துவப் பொறியியல் கல்லூரிகளில், பார்ப்பனரல்லாத மாணாக்கர்க்கு ஒதுக்கப்பட்ட இடங்களைப், பார்ப்பன மாணவர்க்கே தைரியமாய் அளித்தார். இலஞ்ச ஊழலில் சம்பந்தப்பட்ட ஐ.ஏ.எஸ். பார்ப்பன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், பதவி உயர்வு தந்தும், பார்ப்பனரல்லாத அதிகாரிகளை அழுத்தி வைத்தும், ஆச்சாரியார் தமது இனப்பற்றைச் காட்டினார். இவற்றையெல்லாம் “விடுதலை” ஏடு வெளிப்படுத்திட வகை செய்தார் பெரியார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துக்கு.