பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

242


 வேலையை, ஆரம்பித்தார். 6000 கிராமப்புறப் பள்ளிக்கூடங்களை மூடுமாறு ஆணையிட்டார். மீதமிருந்த பள்ளிகளிலும், பாதி நேரடி படிப்பு மீதி நேரம் பிள்ளைகள் அவரவர் அப்பன் தொழிலைச் செய்ய, அதை ஆசிரியர் கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். தமிழகத்திலுள்ள தமிழர் அனைவரும் கட்சி வேறுபாடு மறந்து, இதனைக் கண்டித்தனர். காமராசரே எதிர்த்தார். காங்கிரசிலிருந்த தமிழர்களும், பார்ப்பனர் அல்லாதார் ஏடுகளும் எதிர்த்தன. குல்லுகபட்டரின் குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து நாடே கொதித்துக் குமுறிக் கிளர்ந்தெழுந்தது. ஆச்சாரியார் மூர்க்கத்தனமாக இருந்தார். திராவிட முன்னேற்றக் கழகம் ஈ.வெ.கி. சம்பத் தலைமையில் குலக்கல்வி எதிர்ப்பு முனையை உருவாக்கிற்று. சட்ட மன்றம் நடந்த 15 நாளும் சென்னையில் அறப்போர் மறியலை நடத்திற்று.

“வருணாசிரம முறையை ஜனநாயகத்தின் பேரால் நிலைநாட்ட முனைகிறார் ஆச்சாரியார். இதோ, கடைசிச் சிகிச்சையாக 27.5.53 அன்று கணபதி உருவப் பொம்மையை மாலை 6.30 மணிக்குத் தூள் தூளாக்கி மண்ணோடு மண்ணாய்க் கலக்கிவிடுங்கள். புத்தர் விழாக் கொண்டாடிப் பிள்ளையாரைச் சரியாக உடையுங்கள். ஆச்சாரியாரே மாறிவிடுவார்”- என்று பெரியார் தம்முடைய போர்ப் பிரகடனத்தை அறிவித்தார். பெரியார் திருச்சியில் பிள்ளையாரைத் தாமே உடைப்பதாக முடிவெடுத்தார். இதற்குள் பெரியாருக்குக் கொடும்பாவி கொளுத்திடவும், அவர் உருவத்தை உடைக்கவும் சில மாற்றார் முயன்ற போது, பெரியார் தாமே முன்வந்து, “என் படமும், அதைக் கொளுத்தப் பணமும் நானே தருகிறேன், வாருங்கள்”. என்று மாற்றாரை மனமுவந்து அழைத்தார். குன்றக்குடி அடிகளார் தமிழில் அர்ச்சனை செய்ய ஆணை பிறப்பிக்க வேண்டுகோள் விடுத்தார்; கணபதி உருவம் கல்தானே? உடைப்பதில் தவறில்லை என்றார். ஆனாலும் கயவர்கள் சும்மாயிருப்பார்களா? காலித்தனங்களில் ஈடுபட்டார்கள். திருச்சியில் பெரியார் மாளிகையைக் கொளுத்த வந்த ஒருவன் கையும் மெய்யுமாய்ப் பிடிபட்டான். இதனால் பெரியார் மாளிகையை இன்ஷ்யூர் செய்யும் ஒரு நன்மைதான் விளைந்தது! சென்னையில் நிரம்ப எண்ணிக்கையுள்ள கழகத் தோழர்கள் தாக்கப்பட்டு இரத்தக் காயமுற்றனர். அதனால் அடுத்து நடைபெற்ற கூட்டங்களில் எல்லாம் “27ந் தேதி இரத்தத் துளிகள்”என்போர் பார்ப்பானே வெளியேறு! சி.ஆர். ஆட்சி ஒழிக! என முழக்கமிட்டு வந்தனர். திருத்தணியிலும் தமிழர்மீது தடியடி தர்பார் நடைபெற்றது

மாயூரம் வட்டம் நடுத்திட்டு என்ற சிற்றூரில் ஒரு சைவக்குடும்பத்தில் சீனிவாசபிள்ளை-சொர்ணாம்பாள் தம்பதியரின் இளைய பிள்ளை அரங்கநாதன், பள்ளியிறுதி வகுப்புத் தேர்ந்து, தருமபுரம் ஆதீனத்தில் கணக்கராகச் சேர்ந்து பண்டார சந்நிதியின் அருள் நோக்கால், தனது