பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

247

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


காட்டியதோடு, ஆச்சாரியார் டெல்லி அமைச்சராக இருந்தபோது, 1947-ல் சப்ளை கைத்தொழில் இலாக்காவில், 50 லட்சம் ரூபாய்க்கு ஊழல் நடந்திருந்ததையும் அம்பலப்படுத்தியது. கொலை வழக்கில் கம்யூனிஸ்டு பாலதண்டாயுதம் ஆயுள் தண்டனை பெற்றார். ஜில்லா போர்டுகளை ஒழிக்க அரசு திட்டமிட்டது. திருச்சியில் மாணவர் கழக மாநாட்டில் கடலூர் வீரமணியும் பட்டுக்கோட்டை அழகிரி மகன் துலிப்பும் பங்கேற்றனர். பெரியார் 8.11.53 அன்று ஈரோடு சண்முக வேலாயுதம் துவக்கிய ஈரோட்டுப் பாதை என்ற தமிழ் வார ஏட்டைத் தொடங்கி வைத்தார்.

“கண்ணீர்த் துளிகளின் தொடர்ச்சியான பல கிளர்ச்சிகளால், பொதுமக்களுக்கு ஒரு விதமான அலுப்பும், சலிப்பும் ஏற்பட்டுவிட்டது. அவர்களுக்கு உண்மைகளை உணர்த்த வேண்டி ஆச்சாரியார் கல்வி எதிர்ப்பபுப் படை ஒன்று புறப்படும். 25 உறுப்பினர் கொண்ட இதற்குத் தலைவராக கி. இலக்குவனாரும், செயலாளராக டி.வி. டேவிசும் இருப்பார்கள்” என்று பெரியார் 13.11.53 அன்று அறிவித்தார். அடுத்து, திருச்சியில் நடந்த நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முடிவெடுத்து, டிசம்பர் 2, 3 தேதிகளில் மதுரையிலிருந்து ஒன்றும், ஈரோட்டிலிருந்து மற்றொன்றுமாக, ஆச்சாரியார் கல்வி எதிர்ப்புப் படைகள் புறப்பட்டுச் சென்னை சென்றடையும் என்றார். திருச்சிக் குழுவுக்கு முதல் நாளே பெரியாருக்குக் கடுங்காய்ச்சல் கண்டது. 21.11.53 முதல் ஒருவாரம் திருச்சியில் தங்கிப் பார்த்தார். ஆனைமலை நரசிம்மன் உடனிருக்க, 28-ஆம் நாள் சென்னைப் பொது மருத்துவமனையில் சேர்ந்தார். அன்பர்கள் நிறைய வந்து, தந்தை பெரியாருக்குத் தொந்தரவு தரவேண்டாமென அறிக்கையும் வெளியிடப்பட்டது. கிட்னி எனும் மூத்திர கோசத்தில் கோளாறு ஏற்பட்டிருந்தது. எப்படியோ, யாராலோ, 30.11.53 அன்று (20 ஆண்டுகட்கு முன்னதாக) பெரியார் காலமாகிவிட்டார் என்ற வதந்தி விரைவாகப் பரவி, மருத்துவமனைக்கு ஏராளமானோர் படையெடுக்கத் தொடங்கினர். உண்மை தெரிய வந்த பின்னரே, மக்களுக்கு மன ஆறுதல் பிறந்தது. 7.12.53 அன்று மருத்துவமனையினின்றும் விடுவிக்கப்பட்டு, நேரே ஈரோடு சென்று ஓய்வெடுத்து, 19-ந் தேதிதான் பெரியார் சென்னை திரும்பினார். முன்னரே கழகப் பொதுச் செயலாளர் குருசாமி, பெரியாரை எல்லாக் கூட்டங்களுக்கும் அழைத்துத் தொந்தரவு தரவேண்டாமென்றும்; கூட்டத்தில் தலைவர், இதர பேச்சாளர் யார் என்பதை முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டுமென்றும் அறிவித்தார்.

சட்ட சபையில் முதலமைச்சர் ஆச்சாரியாருக்கு எதிராக டாக்டர் வரதராசலு நாயுடு போர்க் கொடி உயர்த்திச், சட்டமன்றக் காங்கிரஸ் உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்க ஆரம்பித்தபோது நேருபிரான்