பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

266


செய்து, அதை அகற்றுமாறு கோரினார்; வேறு நகரங்களில் எங்காவது இப்படி இடுகாட்டிலும் இழிவுப்பட்டம் சூட்டப்பட்டிருந்தால், அவற்றையும் களைந்திடக் கேட்டுக் கொண்டார்.

1953 பொட்டி சீராமுலு பட்டினி மரணத்தால் ஆந்திர மாநிலம் பிரிந்த போது, பெரியார் எதிர்க்கவில்லை. சென்னையை அவர்கள் கேட்டபோதும், இடைக்காலமாகத் தங்க விரும்பியபோதும் பெரியார் எதிர்த்தார். மொழிவாரி மாநிலங்கள் அமைந்தால், எஞ்சியுள்ள தமிழ் நாடே திராவிட நாடாகும். தமிழ் நாட்டுக்குத் தனியுரிமை கிடைத்தால் பிறரும் கூட்டாச்சியாக அப்போது இணைந்து கொள்ளலாம் என்பது பெரியார் முடிவு. ஆனால் டெல்லியிலுள்ள மத்திய அரசு, ஆந்திர மாகாணம் வன்முறைகளைக் கையாண்டு தன்னைத் தனியே பிரித்துக் கொண்டது குறித்து அஞ்சி, மொழிவாரி மாநிலங்கள் உரிமை கேட்கத் தொடங்கிவிடுமே எனவும் பயந்து, புதிதாகத் தட்சிணப் பிரதேசம் என்பதற்காக ஒரு அமைப்பினை உருவாக்கிட முனைந்தது. இதற்குத் தமிழ்நாட்டிலும் சில ஆதரவாளர்கள் கிடைத்தனர்.

ஆனால், பெரியார் அதன் உட்கருத்தையும் உள்ளுறையையும் சூட்சமத்தையும் நன்குணர்ந்தால், தட்சிணப்பிரதேச அமைப்பை வன்மையாகக் கண்டித்தார். தட்சிணப் பிரதேசம் வந்தால் தமிழராகிய நமக்குத்தான் ஆபத்து. தமிழ் கன்னடம் மலையாளம் மூன்று நாடுகளும் ஒன்று சேர்த்தால், பார்ப்பனருக்குப் போக மிகுதி உத்தியோகமெல்லாம் மலையாளி, கன்னடியர் கைக்குப் போய்விடும். நமக்குக் கக்கூஸ் எடுத்தல், போலீஸ் கான்ஸ்டபிள், ரயில்வே கூலி போர்ட்டர் உத்தியோகம் தான் மிச்சமாகும். இப்போதே நம்மை அடிமைப்போல் நடத்துகிறார்கள். தட்சிணப் பிரதேசம் என்று சொல்லிக் கொண்டு அன்னியர்தான் ஆதிக்கம் செலுத்தி வருவார்கள், ஆந்திரா பிரிந்ததே நல்லது. இனி மலையாளியும், கன்னடியரும் ஆளுக்கொரு ஜில்லா தானே? இவர்களும் போகட்டும். மீதி 12 ஜில்லாக்களைக் கொண்ட தமிழ்நாடு தனிச் சுதந்திர நாடாகி, நமது சமய சமுதாய தேசிய சுதந்திர முயற்சிகளுக்கு எதிர்ப்பு இருக்காது என்று நம்பினேன். இப்போது இதற்கும் தமிழ்நாடு என்று பெயர் தராமல் சென்னை ராஜ்யம் என்பதாகத்தான் பெயர் கொடுத்திருப்பதாகத் தெரிகிறது. இது சகிக்க முடியாத அக்கிரமம்; அவமானம்! இதைத் திருத்துமாறு தமிழ்நாட்டு மந்திரிகளையும், சென்னை - டெல்லி சட்டசபை, மேல்சபை அங்கத்தினர்களையும் இறைஞ்சிக் கேட்டு கொள்கிறேன். தமிழ்நாடு என்ற பெயர்கூட இல்லாமல் எங்களுடைய வாழ்வு எதற்காக இருக்க வேண்டும்?

தட்சிணப் பிரதேச அமைப்புக்கு ஆதரவாக ஒரு மந்திரியே (சி.சுப்பிரமணியம்) இருந்து வருகிறார்கள். இவருக்குப் பின்னால் மத்திய சர்க்கார், நேரு பண்டிதர், பார்ப்பனர்கள், (ராஜாஜி)