பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

267

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


பத்திரிகைகள், சமய சஞ்சீவிகள், காமராசரின் எதிரிகள் ஆகியோர் இருப்பதால், காமராசர் சும்மாயிருப்பது ஆபத்தென நமக்குத் தோன்றுகிறது.

இக்கேட்டினை முளையிலேயே கிள்ளும்படியாக எல்லாத் தமிழ் மக்களையும் வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன். என்று பேசி வந்தார் பெரியார். தமிழ்நாட்டில் பெரிய பதவிகளில் கட்டாயம் தமிழர்களையே நியமிக்குமாறும், தாழ்மையுடன் மந்திரிமார்களைப் பெரியார் வேண்டிக் கொண்டார்.!

பம்பாயிலிருந்து வெளிவரும் “பிளிட்ஸ்” வார இதழ் தென்னாட்டுக் காரல் மார்க்ஸ் பெரியார்தான் என வர்ணித்து, மே திங்களில் தொடர் கட்டுரை எழுதியது. 14.7.1955 டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கையில் இந்தி பற்றிப் பெரியாரின் கருத்துக்கள் விளக்கமாகவும் விரிவாகவும் எழுதப்பட்டிருந்தன. அகில இந்தியாவும் இந்தி எதிர்ப்பில் திராவிடர் கழகத்தின் நிலை என்ன என்று கூர்ந்து கவனித்து வந்த நேரம். இந்தி கட்டாய பாடமாகக் கற்பிக்கப்படல் வேண்டும் என்ற டெல்லியின் விருப்பம், ஆத்திரம், மீண்டும் தலை காட்டிற்று! வடநாட்டார் தமது ஆதிக்க உணர்வின் அடிப்படையில், இந்தித் திணிப்புக்கான உத்தரவுகளைப் பிறப்பிக்கலாயினர். இதனைத் தடுத்து நிறுத்தும் துணிவோ அதிகாரமோ இன்றிக், காமராசரும் இயலாத நிலையில் நின்றார். அமைதியான சூழ்நிலையில் தமிழகத்தைக் கட்டிக்காத்து வந்த பெரியாரைத் தூண்டிவிட்டது ஆணவ ஆட்சி. சென்ற ஆண்டே எச்சரித்தது போல், இனி இந்தி எழுத்துக்களை அழிப்பதோடு நிறுத்தமாட்டோம்; தீவிரமான முயற்சியில் இறங்குவோம் என்று கருத்தறிவித்ததற்கிணங்கத், திருச்சியில், 17.7.1955 அன்று நடந்த திராவிடர் கழக மத்திய நிர்வாகக்குழு, ஆகஸ்டு 1ம் நாள் இந்தி எதிர்ப்பின் அறிகுறியாய், இந்தியத் தேசியக் கொடியைக் கொளுத்துவோம் என முடிவு செய்துவிட்டது! 20.7.55 “விடுதலை” நாளேட்டில் ‘கொடி கொளுத்தும் தீர்மானம்’ என்பது பற்றிப் பெரியார் தலையங்கப் பகுதியில் விளக்கமளித்திருந்தார்.

“குமரன் காத்த கொடியைக் கொளுத்தலாமா என்கிறார்கள் நம் நாட்டுக் கம்யூனிஸ்டுகள்! உலகத்தில் அறிவாளிகள் பிறக்குமிடம் கம்பியூனிஸ்ட் கட்சிதான் என்கிறார்கள். நம் நாட்டுக் கம்யூனிஸ்டுகளைப் பொறுத்த மட்டிலும் அது அத்தனையும் பொய்யாகி விட்டது.

குமரன் காத்த கொடி இதுவல்ல! காங்கிரஸ் கட்சி தோன்றிய நாட்களாய், எத்தனைமுறை கொடியில் மாற்றங்கள் செய்யப்பட்டன என்பது, இவர்களைவிட எனக்குத்தான் நன்றாகத் தெரியும்! கடைசியாக இருந்த கட்சிக்கொடியின் அமைப்பில், ராட்டைக்குப் பதில் அசோக சக்கரத்தைப் பொறித்து, மத்தியில் வைத்து, இதுதான் அரசாங்கக்-