பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

275

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


தனக்குக் கடவுள், ஆத்மா இவற்றில் நம்பிக்கை கிடையாதென்றும் கூறிவிட்டார்.!

புத்தர் இந்நாட்டில் பிறந்தார், வளர்ந்தார், உண்மைகளைக் கண்டறிந்து பிரச்சாரம் செய்தார். ஆனால் இங்குதான் விரட்டியடிக்கப்பட்டார்! அவர் கொள்கைகளை இருட்டடிப்புச் செய்து விட்டார்கள். அவர் கொள்கைகளை நினைத்தால் கூட மனத்தைக் கழுவ வேண்டும் என்ற அளவுக்குப் புத்தரை வெறுக்கும் மனப்பான்மையை உண்டாக்கிவிட்டனர். இராமாயணத்தில் இராமன் கூறுவதாக, ‘புத்தன் ஒரு நாஸ்திகன்; திருடன்: அயோக்கியன்’ என்று இழிவு கற்பித்து வைத்தார்கள், நாயன்மார்கள் ஆழ்வார்களெல்லாரும் உண்டாக்கப்பட்டு, அவர்களும் புத்தரை இழிவுப்படுத்தி இருக்கின்றனர்.

டாக்டர் மல்லலசேகரா விளக்கமாகச் சொன்னார்:- “புத்தர் என்பதாக ஒருவரும் பிறக்கவில்லை. சித்தார்த்தன் புத்தியை உபயோகித்ததால் புத்தரானான். ஆகவே அறிவை உபயோகிக்கச் சொன்னார் புத்தர் என்று. அறிவுக்குப் பொருத்தமானதை நம்பு என்று நாம் சொல்வதற்காக, ஏன் இந்து மதத்தை விட்டு வெளியேற வேண்டும் என்பதுதான் என்னுடைய வாதம்” என்றார் பெரியார்!

திருச்சியில் தி.மு.க இரண்டாவது மாநில மாநாடு 1956 மே 17, 18, 19,20 நான்கு நாட்கள் நடைபெற்றது. 1957 பொதுத்தேர்தலில் தி.மு.க ஈடுபடலாமா எனப்பொது வாக்கெடுப்பு அங்கே நடத்திப் பார்த்ததில்; ஆதரவாக 56, 942 வாக்குகளும், வேண்டாம் என 4203 வாக்குகளும் கிடைத்தன. தி.மு.க தேர்தலில் ஈடுபட்டுத் தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் என்றார் அண்ணா .

மாசி மாதத்திலே ஸ்ரீ ராம நவமி வருகிறதல்லவா? அன்றைக்கு வடநாட்டில் ராம லீலா கொண்டாடி, இராவணன் முதலியோர் உருவங்களுக்குத் தீ வைத்துக் கொளுத்துகிறார்கள். வடநாட்டில் இராவணனைக் கொளுத்தும் போது, தென்னாட்டில் ஏன் இராமன் கொடும்பாவி கொளுத்தக் கூடாது? என்று பெரியார் கேட்டார். ஒரு பொய்யான கற்பனைக் கதையிலிருந்து தென்னாட்டு மக்களை அவமானப்படுத்தும் காரியத்தைப் பார்ப்பனரும் வடநாட்டாரும் செய்தால் - அதைச் செய்ய அவர்களுக்கு உரிமையிருந்தால் அவர்களுக்குப் புத்தி வரும்படியான ஒரு காரியத்தை நாம் ஏன் செய்யக் கூடாது? இன்றைக்கு ராமநவமி என்கிறார்கள்; நமது இளைஞர்களும் மாணவர்களும் இம்மாதிரியான இழிவுபடுத்தும் செயல்களில் ஏமாறாமல் இருக்க வேண்டும். இவற்றில் பங்கு கொள்ளக்கூடாது. அவர்கள் இராவணனைக் கொளுத்துவதற்குப் பதில் தருவது போல், நாம் ஏன் இராமனைக் கொளுத்தக் கூடாது? என்று சிந்தித்துச் செயல்பட வேண்டுகிறேன் என்றார் பெரியார். மேலும், 1956 ஆம் ஆண்டு மாசி