பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

278


தெளிவில்லாத நெஞ்சங்களுக்கும் தெளிவுரை புகன்றார். இராமன் அவதாரமல்ல; சாதாரண மனிதன்தான் என்று, ராஜாஜி, சங்கராச்சாரியார், வால்மீகி, டி.கே.சி மறை மலையடிகள், திரு.வி.க காந்தியார் போன்ற அறிஞர்கள் கூறியுள்ளதை மேற்கோள் காட்டினார். இராமன் படத்தை எரிக்கக் கூடாது என்பதற்கு எதிர்ப்புத் தெரிவிப்போர், வாத முறையில் ஏதும் கூறவில்லையே! என்னிடத்தில் உள்ள அன்பினால், உரிமையால், கேட்டுக் கொள்ளுகிறார்கள். இந்த இராமனோ, அல்லது பிற இந்துக் கடவுள்களோ எரிக்கப்பட வேண்டும். என்பதற்கு, நான் எடுத்துக் காட்டுகின்ற ஆதாரக் காரணங்களை மறுத்துவிட்டுப், பிறகு எரிக்க வேண்டாம், உடைக்க வேண்டாம் என்று கட்டளையிடட்டும்! நான் ஏற்றுக் கொள்கிறேன்! நான் தவறே செய்யலாம்; ஆனால் என்னைக் குறை கூறுவதனாலோ, தண்டிப்பதனாலோ என்னைத் திருத்துவதாகுமோ?

எனக்குக் கெட்ட பெயர் வருவது பற்றியோ, தண்டனை கிடைப்பது பற்றியோ, என் ஆவி பிரிவது பற்றியோ நான் சிறிதாவது இலட்சியம் செய்வதாயிருந்தால் இந்த காரியத்தில் பிரவேசித்து இருக்கமாட்டேன். என் வாழ்நாளில், தமிழர்களுக்கு நீண்ட நாட்களாக இருந்து வருகின்ற காட்டுமிராண்டித் தன்மையான கடவுள் - சமயப்பற்றும், இழிவுத் தன்மையும் கடுகளவு குறைந்தாலும், நான் வெற்றி பெற்றவனாவேன் மன்னித்தருள்க!” என்றார்.

பெரியாரையும் குருசாமியையும் எதிர்பாராத விதமாக 1ந் தேதி காலையே கைது செய்து வைத்திருந்து, பெட்டி படுக்கையுடன் தயாராகப் போயிருந்தும், அன்று மாலை இருட்டான நேரத்தில் வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். பெரியாருக்கே ஏமாற்றந்தான்! முன்கூட்டியே தடை முதலியவை பிறப்பிக்கப்பட்டபோது, 1ந் தேதியைத் தவிரத் தொடர்ந்தும் கொளுத்தலாம், எனப் பெரியார் அனுமதித்திருந்தார். ஆனால் ஒரே நாளிலும், முன்கூட்டியும், எல்லா ஊர்களிலும் இராமன் படம் எரிக்கப்பட்டது. அதில் 4000, 500 பேர் ஈடுபட்டார்கள். 1000, 1500 பேரைக் கைது செய்திருந்தார்கள். என்றாலும், பெரும்பாலான ஊர்களில் போலீஸ் தடபுடல் குறைவாயிருந்ததால் பட எரிப்பு வெற்றியுடன் முடிந்தது. எனவே, தோழர்கள் விருப்பத்துக்கு மாறாக, ஒரு நாள் போதும் என்று அறிக்கை தந்து விட்டார் பெரியார் இந்தக் கிளர்ச்சியும் பெரியாரின் இதர கிளர்ச்சிகளைப்போல் குறைந்த செலவில் நிறைந்த பலனைத் தந்ததில் பெரியாருக்கு அகாலியாக்களிப்பு மறு சிலர்ச்சியை எதிர் பாருங்கள் இந்த முறை நல்ல முடிவுக்கு உதவிய அனைவருக்கும் நன்றி. என்று பெரியார் தமது அறிக்கையை முடித்திருந்தார். கொளுத்தியது குற்றமல்ல என்பதே பெரியாரின் வாதம்.