பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

281

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்



மதத்தின் மேல் குற்றம் இல்லை; அதைச் சார்த்திருப்பவர்கள் நான் குற்றம் செய்து விடுகிறார்கள் என்று சிலர் வாதம் செய்கிறார்கள். பார்த்திருப்பவர்களைத் திருத்தும் பொறுப்பு மதத்தினுடையது இல்லையா? மதத்தில் காலத்துக்கு ஏற்ற மாறுதல் செய்ய வேண்டாமா? ஒரு கன்னத்தில் அடித்தால் மற்றொரு கன்னத்தையும் திருப்பிக்காட்டு என்று ஏசு சொல்லியிருக்கிறார். இன்று சாத்தியப்படுமா? மேல் துணியைக் கேட்டால் இடுப்புத் துணியையும் கொடுத்து விடு என்று சொல்லியிருக்கிறார். இப்படிக் கொடுத்து விட்டு நிர்வாணமாய் நிற்க இந்தக் காலத்தில் இயலுமா? காலப்போக்குக்குப் பொருத்தமல்லாதவற்றை மாற்றிக் கொள்ள வேண்டும்; திருத்திக் கொள்ள வேண்டும் - என்பதாக ஆய்ந்து மொழிந்தார் பெரியார்.

வகுப்புவாரிப் பிரதி நிதித்துவம் பற்றிச் சரிவரப் புரிந்து கொள்ளாமல் ஆதிதிராவிட மக்கள் ஏதேதோ பிதற்றியதாக அறிந்து, பெரியார் தமது 78-ஆவது பிறந்த நாள் விழாவில், சென்னை பெரியார் திடலில், அதைக் குறிப்பிட்டுச் சொற்பொழிவாற்றினார்: “வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் பார்ப்பானுக்கு விரோதம் என்று புரிந்து 1950-ல் அதை எடுத்துவிட்டார்கள். நாங்கள் இடையறாது செய்த கிளர்ச்சியின் பயனாய் சில திருத்தங்கள் செய்துள்ளார்கள். படிப்பு பதவி, சமூகம் ஆகியவற்றில் பின் தங்கியவர்களுக்குச் சலுகைகள் செய்யலாம் என்பதே அந்த அரசியல் சட்டத் திருத்தம். அதனால் ஆதித்திராவிட மக்களுக்கு அவர்களுக்குரிய விகிதாச்சாரம் முழுவதுமே கிடைத்து விடுகிறது. மற்ற திராவிட மக்களுக்கு விகிதாச்சாரம் கிடைக்கவேயில்லை” என்பதைச் சுட்டிக் காட்டும்போது, ஆதிதிராவிட “மக்கள், நாங்கள் அவர்களுக்கு எதிராக இதைச் சொல்லுகிறோம் என நினைப்பது நன்றி கெட்ட செயல். ஆதி திராவிடர்களின் கோயில் நுழைவு, தெரு நுழைவுக்காக முதன் முதல் போராடிச் சிறை சென்ற எங்களையா சந்தேகப்படுவது? இன்றைக்கு ஆதித்திராவிட மக்கள் படித்தவர்களாகவும், உத்தியோகஸ்தர்களாகவும், சட்டசபை உறுப்பினர்களாகவும், மந்திரிகளாகவும் ஆனார்கள் என்றால், பார்ப்பனர்களாலா? இதற்கெல்லாம் அவர்கள் நமக்கு நன்றி செலுத்தவில்லை என்றாலும், நமக்கு விரோதிகளாகவாவது ஆகாமல் இருக்க வேண்டாமா?” வெம்பிய நெஞ்சத்தின் வேதனை தோய்ந்த வார்த்தைகளல்லவா?

திராவிட ஐ.ஏ.எஸ். அதிகாரியும், நரிக்குறவர் போன்ற நாதியற்ற கூட்டத்துக்கும் மனித வாழ்வு நல்கிய மாபெரும் அன்பாளரும் பண்பாளருமாகிய ஆர்.எஸ். மலையப்பன், திருச்சி கலெக்டராக இருந்தபோது, பார்ப்பன நீதிபதிகள் அவரைப் பழிவாங்கி விட்டனர். இந்தத் தீர்ப்பின் உண்மை குறித்துத் திராவிடர் கழக நிர்வாகக் குழுத் தலைவர் தி.பொ. வேதாசலம் மனங்குமுறுதலுடன் ஓர் அறிக்கை வெளியிட்டார். 26. 10.56 அன்று திருச்சியில் மத்திய நிர்வாகக் குழு