பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

284


வந்தார். சாதி ஒழிப்புப் பிரச்சினையில் பெரியாருடன் ஒத்த கருத்துக் கொண்ட அவர், பெரியாரைச் சந்திக்க விரும்பினார். இராமாயணம் முதலியவைகளையும், கடவுள் புராணங்களையும் ஏன் ஒழிக்க வேண்டுமென ஐயமுற்றார். திருச்சி தேசியக் கல்லூரியில், 18.1.37 அன்று காலை 10-45 மணிக்கு, இருவரும் சந்தித்துச் சுமார் இரண்டு மணி நேரம் அளவளாவி, மகிழ்ந்தனர்.

நீங்கள் அரசியலில் நேரடிப் பங்கு பெறாமல் சாதி ஒழிப்புப் பணியில் ஈடுபடுவதைப் பெரிதும் பாராட்டுகிறேன். இராமாயணத்திலுள்ள நல்ல நீதிகளை எடுத்துக் கொள்ளலாமே? கடவுள், புராண ஒழிப்பு வேலையை நீங்கள் விட்டுக் கொடுத்தால், சாதி ஒழிப்புப் பணியில் உங்களோடு நிறையப்பேர் வரக்கூடுமே? என்ற வினோபாவின் கேள்விக்குப், பெரியார், இராமாயணம் நீதி நூல் என்பதற்கு அதில் ஒன்றும் இல்லை. மக்களுக்கு நீதி சொல்ல நினைத்தால் உங்களைப் போன்றவர்கள் புதிய நூல் எழுதலாமே! விஷத்தின்மீது சர்க்கரை பூசிக் கொடுத்தால், பொது மக்களில் எத்தனை பேருக்குச் சர்க்கரையை மட்டும் சாப்பிட்டுவிட்டு, விஷத்தைத் துப்பத் தெரியும்? நான் வான்மீகி, கம்பராமாயணங்களைப் படித்தே சொல்லுகிறேன். கடவுள்கள், பதிவிரதைகள் என்று சொல்லப்படுகின்றவர்களிடம், கொஞ்சங்கூட நாணயமோ, யோக்கியதையோ, ஒழுக்கமோ இருக்கவில்லை. ஒரு கடவுள் உண்டு என்கிறவர்களிடம் நான் தகராறுக்குப் போவதில்லை. ஆனால் என்னுடைய சாதி ஒழிப்புப் பணிக்கு, அந்த ஒரு கடவுள் தடையாயிருந்தாலும், அதுகூட ஒழிந்துதான் ஆகவேண்டும்!

நீங்கள் ஏழெட்டு மாதங்களாக, என் தமிழ்நாட்டு மக்களிடையே, சாதி ஒழியவேண்டுமென்று சொல்லிவருகிறீர்கள்! ஆனால் இதைப் பத்திரிகைகாரர்கள் போடுவதேயில்லை. நான்தான் எனது பத்திரிகையில் இந்தச் சங்கதிகளைப் போடுகிறேன்; என்றார் பெரியார். தமக்கு அதிகமான அளவுக்கு பூமிதானம் கிடைத்திடப், பெரியாரும் ஆவன செய்ய வேண்டினார் வினோபா பாவே. பெரியார்“என்னால் கூடுமான உதவிகளைச் செய்கிறேன். நான் அரசியலில் ஈடுபட்டு, ஆட்சியைப் பிடிக்கிறவனாயிருந்தால் உங்கள் பிரச்சினைக்கு ஒரே வரியில் உத்தரவு போட்டு விட முடியும் ஆனால் நான் மேற்கொண்டுள்ள சாதி ஒழிப்பு, சட்டத்தினால் மட்டும் ஆகக் கூடியதில்லை. இந்தப் பணியே எல்லாவற்றிலும் முக்கியமானதென்று: நான் கருதுகிறேன்.” எனப் பதிலுரைத்தார். வினோபா பாவேக்கு ஓரளவு தமிழ் தெரியும் ; எனினும், இடையில் ஒரு நண்பர் இந்தியில் மொழி பெயர்த்துக் கூறினார். இருவரும் மகிழ்வுடன் விடைபெற்றனர். இது ஓர் அரிய சந்திப்பாகும். பெரியாரை அழைத்து வர, வினோபா ஜீப் அனுப்பியிருந்தார். ஆனால் பெரியார் தமது காரிலேயே சென்று வந்தார்