பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

292


கேடயம் போன்ற போர்க்கருவிகளைப் பரிசாக வழங்கினர். சென்னை பெரியார் திடலில் 23.9.57 அன்று நடந்த விழாவில் எஸ். ராமநாதன், சி.பா ஆதித்தன் ஆகியோர் பங்கேற்றனர். “கரண்ட்” ஆங்கில வார ஏட்டின் ஆசிரியர் டி.எஃப் காரகா, 27.9.57 அன்று பெரியாரை வந்து சந்தித்து சென்று, 2.10.57, 9.10.57 தேதி இதழ்களில் நல்ல மதிப்பீட்டுக் கட்டுரை தீட்டியிருந்தார். 9.10.57 அன்று ஆத்தூரில் பேசிய பெரியார், சாதி ஒழிப்புப் போரில் ஈடுபட விரும்புவோர் இரத்தத்தில் கையெழுத்திட்டுத் தமக்கு அனுப்புமாறு கோரினார்.

தஞ்சையில் சாதி ஒழிப்பு (ஸ்பெஷல்) மாநாடு 4.11.57 அன்று கோலாகலத்துடன் கூடிற்று. இரண்டு லட்சம் ஈட்டிகள் திரண்டதாகப் பெரியாரே வர்ணித்தார். இந்த மாநாட்டில்தான் பெரியாரை ஒரு தராசில் அமர்த்தி இன்னொரு தட்டில், அவரது எடைக்குச் சரியாக வெள்ளி ரூபாய்களை அள்ளிக் கொட்டித், துள்ளும் உவகையில் உள்ளம் களிகொள்ளக், கருஞ்சட்டையினர் பெருஞ்சாதனை புரிந்தனர். வெள்ளிப் பணத்தைக் கண்டதும், உள்ளம் குளிர்ந்து, ஓய்ந்து விடவில்லை பெரியார். அங்குதான் புதியதொரு போர்ப் பிரகடனத்தைப் புலியேறு போல் முழக்கினார். சாதி ஒழிப்புக்குச் சர்க்கார் இணங்காவிடில் - அதாவது, பிராமணன் என்று ஒரு சாதி கிடையாது சட்டத்தில் அந்த மாதிரிக் கருதமாட்டோம் என்று கூறாவிடில் - அரசியல் சட்டத்தில் சாதியைப் பாதுகாக்கும் பிரிவுக்குத் தீ வைப்போம் என்றார் பெரியார். அக்கிரகாரத்தைத் கொளுத்தி, 1000 பார்ப்பனர்களையாவது கொன்றால்தான் சாதி ஒழியுமென்றால் அவ்வாறே கொளுத்துவோம்; அவ்வாறே கொல்லுவோம் என்றார் பெரியார். மக்களே எதிரொலித்து, இப்படியாக முழங்கினார்கள். தீ வைக்கும் நாள் 26.11.57 என்பதையும் பெரியார். அங்கேயே அறிவித்துவிட்டு திருச்சி சென்றார். 6.11.57 அன்று அரசு பெரியாரைத் திருச்சியில் கைது செய்து, அவர்மீது 117, 323, 324, 326, 436, 302 ஆகிய ஆறு செஷன்களில் வழக்குப் பதிவு செய்து, பின்னர் விடுவித்தது. பெரியார் தளர்ச்சியுறவில்லை . 26.11.1957 அன்று நிச்சயம் நாங்கள் அரசியல் சட்டத்தைக் கொளுத்துவோம் என்ற வீரமுரசு கொட்டினார். மீண்டும் பெரியாரை 25.11.67 அன்று, திருச்சியில் கைது செய்து, அந்தச் சிறைப் பறவையின் சிறைக்கோட்டம் நண்ணிய எண்ணிக்கையைப் பதினைந்தாக உயர்த்தி, அவரையும் உயர்த்தியது அரசு!.

சட்டம் கொளுத்துவோர் பட்டியல் “விடுதலை” ஏட்டில் நாள்தோறும் 10 ஆயிரமாகப் பெருகி வந்தது. 26-ம் நாள் மட்டும் நாடு முழுவதும் 30000 பேர் கைதாயினர். 15 பேர் சிறைக் கொடுமையால் மாண்டனர். “நியூயார்க் டைம்ஸ்” ஏட்டில், இந்தியாவில் திராவிடர் கழகத்தினர் இந்திய அரசியல் சட்டத்தையே கொளுத்தி, 2000 பேருக்கு மேல் சிறை ஏகினர் என்று செய்தி ஒன்று பிரசுரமாயிற்று! அரசியல்