பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

293

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


சட்டத்தைக் கொளுத்தித் திராவிடர் கழகப் பொதுச் செயலாளரான எஸ்.குருசாமி கைதாயினார். அவர் இத்தோடு ஒன்பதாம் முறையாகச் சிறை புகுந்தார்.!

சென்னையில் 30.11.57 அன்று, பெரியாரும் வீரமணியும் பேசினார்கள். தனித் தமிழ்நாடு பெறுவதே எங்கள் லட்சியம் என்றார் பெரியார். “மனுதர்ம சாஸ்திரத்தின் மறுபதிப்பாகிய அரசியல் சட்டத்தைக் கொளுத்தியதில் தவறில்லை. எங்கள் உரிமையை, உணர்ச்சியை மதிக்காமல், நாங்களும் இந்த நாட்டு மக்கள்தான் என்பதைக் கூடக் கருதாமல், எங்களுக்கு அடக்குமுறைதான் பதில் என்றால், என்ன நியாயம்? நாங்கள் என்ன வயிற்றுப் பிழைப்புக்கும், விளம்பரத்துக்குமா இந்தக் காரியம் செய்கிறோம்?” என்று கேட்டார் பெரியார். “இந்த ராஜ்ய மக்களுக்கு எதில் அதிகாரமிருக்கிறது? அரிசி பற்றாக்குறை இருக்கையில், விலை விஷம் போல் ஏறும்போது இங்கிருந்து கேரளாவுக்கு அரிசி போவதைத் தடுக்க முடிகிறதா? இங்கிருந்து 60 கோடி வரியைக் கொண்டு போய், நமக்குப் பிச்சைக்காசு 8 கோடி தருகிறானே. கேட்க முடிகிறதா? அங்கே பலகோடிக் கணக்கில் திட்டங்கள் ஆரம்பிக்கிறானே, இங்கென்ன செய்கிறான்? நெய்வேலியில் ஒரு திட்டம் ஆரம்பித்து. அதற்குள்ளாகவே வட நாட்டார்களைத் திணித்து விட்டனர். பெரம்பூரில் ஒரு கோச் ஃபேக்டரி ஆரம்பித்தான். அதிகாரமெல்லாம் வடநாட்டானுக்கும் பார்ப்பானுக்கும்தானே? திராவிடர்கள் வெறும் கூலிகளாகத்தானே, இருக்க முடிகிறது? இதை எதிர்த்து, இந்த ராஜ்ய அரசாங்கம், கேட்க முடிகிறதா? எனவே நாம் தனியாகப் பிரிந்து கொண்டாலொழிய, நம் மக்களுக்கு நன்மை செய்ய முடியாதென்று, ஆதாரப்பூர்வமாய்க் கூறுகிறேன்” என்றார் பெரியார்.

இதற்கிடையில் நேரு பிரான் “இந்திய அரசியல் சட்டம் பிடிக்கவில்லையானால் நாட்டை விட்டு வெளியேறி விடுங்கள்” என்று கூறிப், பெரியாரைத் தூண்டிவிட்டார். அத்துடன் “இந்த அரசியல் சட்டம் பிடிக்கவில்லையானால், ஜெயிலிலோ, பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலோ இருக்கத்தான் அவர்கள் லாயக்கானவர்கள்” என்றும் ஆத்திரத்தைக் கொட்டினார். எப்போது? பெரியார் மீது வழக்கு நடந்து கொண்டிருக்கும் போது - எங்கே? அதே திருச்சி நகரில்

“தமிழ் உணர்ச்சிக்குத் தாயகமான திருச்சி நகரில் 20, 30 ஆயிரம் மக்களிடையே இப்படிப் பேசிவிட்டுத் திரும்பிப் பத்திரமாகத் தன் ஊருக்குப் பறந்து சென்றிருக்கிறார், 8000 போலீஸ் காவலுடன், இந்தியாவின் முதல் மந்திரியாயிருக்கும், பார்ப்பனப் புரோகித சாதியைச் சேர்ந்த, பண்டித ஜவகர்லால் நேரு இது. தோலைக் கடித்துத் துருத்தியைக் கடித்து, ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்துக், கடைசியில்