பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

304



சிறைக்கொடுமை தாளாமல் தொண்டர்கள் அவதியுற்றனர். 9 மாத தண்டனையில் இருந்த குருசாமி பொது மருத்துவமனைக்குக் கொணரப்பட்டார். பல ஊர் சிறைகளிலும் தோழர்கள் உடல் நலிவு கொண்டனர். துன்பத்தின் எல்லையாக 9.3.58 அன்று திருச்சி சிறையில் பட்டுக்கோட்டை ராமசாமியும், 10.3.58 அன்று மாயூரம் மணல்மேடு வெள்ளைச்சாமியும் பலி ஆயினர். பெரியார் கேள்விப்பட்டதும் சோகமே உருவாயினார். உடனே வீரமணி வாயிலாகச் சொல்லி அனுப்பினார். மணியம்மையார் திருச்சி விரைந்தார். முதலில் அரசு மறுத்தது. பின்னர், இருசடலங்களையும் சுடலைக்கு எடுத்துச் செல்ல அனுமதித்தது. திருச்சியில் 11.3.58 அன்று லட்சக்கணக்கான மக்களடங்கிய ஊர்வலம், மணியம்மையார் தலைமையில், இரு சவங்களையும் ஏந்திச் சென்றது. நாடெங்கும் கண்டனக்கணைகள் பாய்ந்தன! சிறையிலிருந்த பிற தோழர்கள் சாப்பிட மறுத்தனர் சென்னையிலும் மாபெரும் கண்டன ஊர்வலம் 16.3.58 அன்று நடந்தது, சட்டமன்ற மேலவையில் வி.வி. ராமசாமியின் கேள்வி ஒன்றுக்குப் பெரியாரை, விடுதலை செய்ய முடியாது, என பதிலளித்தார் உள்துறை அமைச்சர் பக்தவத்சலம்

எட்டுமாத காலமாக அன்றாடம் நடைபெற்ற, 1,010 பேரைச் சிறைக்கோட்டம் அனுப்பிய முரளி கஃபே பிராமணாள் எழுத்து அழிப்புப் போராட்டம் வெற்றியில் முடிவுற்றது. 1958 மார்ச் 22 ம் நாள் முரளீஸ் அய்டியல் காபி சாப்பாடு ஒட்டல் என்று பெயர் மாற்றப்பட்டது. தொடர்ந்து சாதி ஒழிப்பு மாநாடுகள் பல மாவட்டங்களிலும் நடைபெற்ற வண்ணமிருந்தன. குன்றக்குடி அடிகளார் டாக்டர் மா. ராசமாணிக்கனார், டி.வி சொக்கப்பா, பட்டுக்கோட்டை வழக்கறிஞர் எம் . எஸ். கிருஷ்ணசாமி பாவலர் பாலசுந்தரம், பாரதிதாசன், எம்.எல்.ஏ வீர கே. சின்னப்பன். வீரமணி. மணியம்மையார், எஸ் ராமநாதன், ச.சோ பாரதியார் போன்றோர் பங்கேற்று நடத்தினர்.

நாம் தமிழர் இயக்கம், இலங்கையில் தமிழர் வாழும் பகுதியும் சேர்ந்த தனித் தமிழ்நாடு கோரியது. இது அபத்தம் என்று கண்டித்தார். பண்டிதநேரு. தாம் பதவி விலகப் போவதாக ஓர் அதிர்ச்சி வைத்தியம் செய்தார். ‘இவர் விலகமாட்டார்; பிரதமராகத்தான் சாவார்’ என்று “விடுதலை” அறுதியிட்டுக் கூறியது. அவ்வாறே, பின்னர், சிலநாள் ஓய்வெடுக்கப் போகிறேன் என்று ஸ்டண்ட் செய்து விட்டார் நேரு. மொர்ரார்ஜி தேசாய் டி.டி.கே இடத்தில் நிதியமைச்சராகப்பட்டார்.

1958 மே 7ம் நாள் மணியம்மையார் மீதும், தஞ்சை நெடுமாறன் மீதும் 153A பிரிவுப்படி ஒரு வழக்குத் தொடர்ந்தது அரசு; இளந்தமிழா புறப்படு போருக்கு என்ற கட்டுரையை வெளியிட்டதற்கும், எழுதியதற்கும்! பெரியாருக்கு மருத்துவமனையிலும் நல்லசுரம்