பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

306


ஆகியோர் விடுதலை பெற்றனர். புரட்சிக்கவிஞரின் “குயில்” உரிமைக் குரலெழுப்பிப் பாடிப் பறந்து கொண்டிருந்தது. 7.5.58 அன்று மணியம்மையார் மீது தொடரப்பட்ட வழக்கில், 18.8.16 அன்று, ‘100 ரூபாய் அபராதம்; கட்டத்தவறினால் ஒரு மாதம் சிறை’ என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கழகத்தின் நடைமுறைக் கிணங்க அம்மையார் சிறைபுகுந்தார். நாடெங்கும் கண்டனக் கூட்டங்கள் நிகழ்ந்தன சென்னையில் நடந்த கண்டன ஊர்வலம், பொதுக் கூட்டத்தில், 25.8.58 அன்று பெரியாரே பங்கேற்றார். வேலூரில் நாம் தமிழர் மாநாட்டைத் துவக்கி வைத்தபோது, “தமிழர் திராவிடரே! தமிழ்நாடும் திராவிடமே!” என்ற கருத்தைப் பெரியார் விளக்கி, வலியுறுத்தினார். ஆறு மாதம் வெளியில் வலம்வர இயலாமற்போனதை ஈடு செய்வது போலப் பெரியார், 29.8.1958 ஒரு நாளில் மட்டும் தஞ்சை மாவட்டத்தில் 28 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசினார்.

மணியம்மையாரைச் சிறைக்கு அனுப்பியும் திருப்தி அடையாத அரசினர், அவர்களுக்குத் சொந்தமான 4000 ரூபாய் மதிப்புள்ள எம்.எஸ்.சி 5880 எண்ணுள்ள காரை 30.8.58 அன்று ஜப்தி செய்து, ஒரு ஜீப்பில் கட்டி இழுத்துச் சென்றனர். இதற்கு மாறுபாடாகத் தண்டனைக் காலத்தில் 15 நாள் மீதமிருந்த போதே, மணியம்மையாரைக் காரணமின்றி 1.9.58 அன்று அரசு விடுதலை செய்தது! பெரியார் தமது சுற்றுப்பயணத்தின்போது, செப்டம்பர் 1 ஆம் நாள் ஆவுடையார் கோயிலுக்குச் சென்று மிக நுட்பமான சிற்ப வேலைப்பாடுகளைக் கண்ணுற்றார். 5 ஆம் நாள் குன்றக்குடி மடத்திற்குச் சென்று, இளஞ்சிறார்கள் சாதிக்கொடுமை பற்றி நடத்திய நாடகம் ஒன்றினைக் கண்டு, உணர்ச்சி வயப்பட்டார்!

சிறைக் கொடுமைக்குள்ளாகியவர்களில் 10 ஆவது பலியாகத் திருச்சி சின்னசாமி 8.9.58 அன்று மறைந்த போது, சவ அடக்கத்தில் பெரியார் கலந்து கொண்டார் இந்திய யூனியன் படம் கொளுத்தத் தமக்கு 50,000 பேர் தேவையென்று அழைப்பு விடுத்தார். எல்லாரும் பெயர் கொடுக்கத் தொடங்கலாம் என்றும் கூறினார். 7.9.58 அன்று பரமக்குடியில் பேசும் போது பெரியார், “நம்மைப் பார்ப்பானுக்கு நிரந்தர அம்மையாக்கி விட்டுப் போன காந்தியின் படத்தை எரிப்போம்; சிலையை உடைப்போம்” என்று முழக்கமிட்டார். 17.9.58 பெரியாரின் 80 ஆம் பிறந்தநாள். 21 ந் தேதி சென்னையில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. மெரினா கடற்கரையிலுள்ள புகாரி சிற்றுணவு விடுதியில் பெரிய அளவில் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. மாலைப் பொதுக்கூட்டத்தில் பெரியாருக்கு வெள்ளி வாள், ஆதித்தனாரால் வழங்கப்பெற்றது. அதே போன்று மேலக்கற்கண்டார் கோட்டையில் வெள்ளித்தட்டு, இடைப்பாடியில் வெள்ளித்தடி, தாதகாப்பட்டியில் வெள்ளிச் சம்மட்டி ஆகியவை