பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

309

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்



தி.பொ. வேதாசலத்தின் 62 ஆவது பிறந்த நாள் 1959 சனவரி 20ம் நாளாகும். அன்று பெரியார், கழகத் தோழர்கள் சிலருடைய நடவடிக்கைகளில் அதிருப்தி தெரிவித்து, மன வருத்தமுற்று, ஓர் அறிக்கை முன்னெச்சரிக்கையாக வெளியிட்டார். அடுத்து, 30.1.59 அன்று வெளியான பெரியாரின் ஒழுங்கு நடவடிக்கை, மிகக்கடுமையாயிருந்தது. சார்பு மன்றங்கள் சுயமரியாதைச் சங்கங்கள் அனைத்தையுமே கலைத்தார். எஸ். குருசாமி, டி.எம் சண்முகம், லோகநாதன், எம்.கே.டி சுப்பிரமணியம், எம் .ஆர். ராதா ஆகியோர் கழகக் கூட்டங்களில் தற்காலிகமாகக் கலந்து கொள்ளக்கூடாது என்றும் தடைபோட்டார்.

1.2.1959 அன்று பெரியார் கார் மூலமாகச் சுமார் 4000 மைல் நீளச் சுற்றுப்பயணம் ஒன்று மேற்கொண்டார். மணியம்மையார், ஆனைமலை ராமகிருஷ்ணம்மாள், ஏ.என் நரசிம்மன், கி.வீரமணி, புலவர் கோ. இமயவரம்பன் ஆகியோரும் பெரியாருடன் புறப்பட்டனர். சிகந்தரபாத் ஜான்சி, நாகபுரி, ஜப்பல்பூர் வழியே கான்பூர் சென்றார்கள். கான்பூரில் பெரியார் 2 மணி நேரம் பிற்படுத்தப்பட்டோர். பிரச்சினை குறித்து ஆங்கிலத்திலேயே உரையாற்றினார். பின்னர் லட்சுமணபரி பல்கலைகழக யூனியனில் சொற்பொழிவு. 12 ந்தேதி டெல்லி பயணமானார். அங்கு ரிபப்ளிகன் கட்சியாரின் கூட்டத்திலும், தமிழர்கள் கூட்டத்திலும் பெரியார் பேசினார். 17 ந் தேதி அங்கிருந்து கிளம்பி பம்பாய்க்கு 20 ந் தேதி சென்றடைந்தார். அங்கும் மாபெரும் வரவேற்பு; கொள்கை முழக்கம் 25.2.59 அன்று பம்பாய் விட்டுக்கிளம்பி, 28.2.59 சென்னை வந்து சேர்ந்தார்கள் பெரியார் குழவினர். வெற்றிகரமான இந்த வடநாட்டுச் சுற்றுப் பயணத்தைக் கொண்டாடச் சென்னை வாழ் பெருமக்கள் 1.3.59 அன்று ஊர்வலத்தில் ஒரு லட்சம் பேரும், மெரினாப் பொது கூட்டத்தில் 2 லட்சம் பேருமாகத் திரண்டு, பெரியாரை வாழ்த்தினர். பம்பாயிலிருந்தபோது “கரண்ட்” நிருபர் பி.ஜே. பெர்னாண்டஸ் பெரியாரைப் பேட்டி கண்ட விவரம் 4.3.59 “கரண்ட்” இதழில் சிறப்பாகவும், எடுப்பாகவும் வெளியிடப்பட்டிருந்து. 8.3.59 “கல்கண்டு” இதழும், பெரியார் எல்லா மொழியிலுமே பேசுகிறார் என்று பெருமிதத்தோடு கூறியது. வடபுலத்து ஆங்கில ஏடுகளான ஸ்டேட்ஸ்மன், அட்வான்ஸ், பயனீர், நேஷனல் ஹெரால்டு, மற்றும் உருது மொழி ஏடுகளான சியாசத், அல்ஜமயத் ஆகியவை பெரியாரின் பேச்சு, கொள்கை, போராட்டம் பற்றி விளக்கமான செய்திச் சித்திரங்கள் வெளியிட்டுச் சிறப்பித்தன.

தஞ்சை மாவட்டம் குத்தாலம் பகுதியில் வசதியான குடும்பத்தைச் சார்ந்த கோ.இமயவரம்பன், புலவர் பட்டம் பெற்றதும், நேரே பெரியாரிடம் சென்று, தன்னை அவர் தொண்டராகப் பிணைத்துக் கொண்டவர், திருமணமே