பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

312


பெரியாரின் கார், தஞ்சையருகில் விபத்துக்குள்ளாயிற்று. வண்டிக்குச் சேதம்; சீட்டாவுக்குக் காயம் 21-5-59-ல், சிறந்த சமூகசீர்திருத்தத் தலைவராகவும் முதல் இந்தி எதிர்ப்புப் போரின் வீராங்கனையாகவும் திகழ்ந்த டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் மறைந்தார். மதுரை மாவட்ட திராவிடர் கழகச் சார்பில் திண்டுக்கல்லில் 7-6-59 அன்று நடந்த சாதி ஒழிப்பு மாநாட்டில் குன்றக்குடி அடிகளார் தலைவர் வீரமணி திறப்பாளர், தங்கராசு கொடி ஏற்றுவோர், சொற்பொழிவு , மணியம்மையார், புரட்சிக் கவிஞர், தி.பொ. வேதாசலனார், சென்னை இளம்பரிதி ஆகியோர். சுதந்திரத் தமிழ்நாடு மாநாட்டில் தலைவர் ஆதித்தனார், திறப்பாளர் திருக்குறளார் முனிசாமி, சொற்பொழிவு - தமிழ்வாணன், பாவலர் பாலசுந்தரம் ஆகியோர். இரு மாநாடுகளிலும் பெரியார் பேருரை உண்டு!

கதர், கைத்தறி, தீக்குச்சி செய்தல் போன்ற சிறு கைத்தொழில்களைக் குடிசைத் தொழில்களாகச் செய்வதால், எவ்வளவு சக்தியும் பொருளும் விரயமாகி, நட்டமும் ஏற்படுகிறது, என்பதைப் புள்ளி விவரங்களுடன் பெரியார் விளக்கி வந்தார். விஞ்ஞானயுகத்தில், இயந்திரங்களுடன் போட்டிபோட இவற்றால் நிச்சயம் முடியாது. தரமும் கிடைக்காது. மலிவு விலையிலும் போட்டி போட முடியாது - என்பதெல்லாம் பெரியார் தெளிவுறுத்தினார்.

சென்னை பெரியார் திடலில் கட்டடம் கட்டுவதற்கு 50,000 ரூபாய் தேவை என்று, பெரியார் திருச்சி மத்திய நிர்வாகக் குழுக் கூட்டத்தில் கருத்து வெளியிட்டார். அவ்வளவுதான்! அடுத்து 2-10-59 “விடுதலை”யில் ‘கட்டட நிதி அவசரம்’ என்று ஒரு தலையங்கம் தீட்டப்பட்டது. சுற்றுப்பயணக் கூட்டங்களெல்லாம் நிதியளிப்புக் கூட்டங்களாகப் போட்டி போட்டு நடத்தப்பட்டன. வெள்ளப்பெருக்கென வெள்ளிப் பணம் விரைந்து நிறைந்தது. 13-10-59 அன்று, 30,000 ரூபாய்; 13-11-59 வரை அடுத்த ஒரு மாதத்தில் ரூ.75,000. 22-12-59 அன்ற மொத்த நிதி வசூல் 1 லட்சம் ரூபாய். 1959-ஆம் ஆண்டின் இறுதி நாளில் உறுதியாகக் கிடைத்த மொத்த நிதி ரூ.1,13,897. கேட்டது ரூ.50,000 தானே !

19-10-59 அன்று பெரியார் சிதம்பரத்தில் சொற்பொழிவாற்றும் நேரத்தில், இதுவரை தாம் சேமித்த 7 லட்ச ரூபாய் சொத்து விவரங்களைக் கூறி, அனைத்துமே தமிழருக்காகக் கட்டிக் காத்துப் பெருக்கி வருகிறேன் என்றார். 31-ம் நாள் கும்பகோணத்தில் உரையாற்றுகையில், தஞ்சை மாவட்டம் திராவிடர் கழக நிதியாகவே திகழ்கிறது எனப் புகழ்ந்தார்; பூரித்தார்.

சிங்கப்பூரில் 7-11-59 அன்று பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பெற்றது. பெங்களூரில் 13-12-59 அன்று பெரியாரிடம் கட்டட நிதி வழங்கப்பட்டது. 2-11-59 ஈரோடு எஸ். அப்பாவு, திராவிட