பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

318


ஆதித்தனாரும் கைது செய்யப்பட்டனர். நாடு முழுதும் அன்று பல இடங்களில் தேசப்படங்கள் தீக்கிரையாயின. நள்ளிரவு வரையில் போலீசார் வேட்டையாடி 4000 பேரைக் கைது செய்திருந்தனர். சென்னையில் டி.எம். சண்முகம், லோகநாதன் உள்ளிட்ட 75 பேர் மீது வழக்குப்போட்டு 24 - 5- 60-ல் ஒருமாத சிறை தண்டனை வழங்கினார்கள். ஈரோடு திராவிடர் கழகத் தலைவர் அங்கமுத்து, 124A, 153 பிரிவுகளில் வழக்குத் தொடுத்து ஒருமாத சிலை அளிக்கப்பட்டது, 7-7-1960 அன்று.

இவ்வளவுக்குப் பிறகும், “காமராசர் ஆட்சியின் சாதனைகள் என்ற புத்தகம் திருச்சி பெரியார் மாளிகையில் கிடைக்கும் எஸ். விளம்பரம் “விடுதலை”யில் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்த ஜூலை மாதத்தில் இந்திய அரசைச் சார்ந்த ரயில்வே மற்றும் தபால் தந்தி ஊழியர்கள் பொது வேலை நிறுத்தம் செய்தனர். 14-7-60 முதல் 3 நாள் நீடித்த வேலை நிறுத்தத்தின் விளைவாக அரசுக்கு 25 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டது. அரசு ஊழியர்கள் தொழிலாளர்கள் அல்லர் எனவே அவர்களுக்கு வேலை நிறுத்தம் செய்ய உரிமை கிடையாது என்பது பெரியாரின் வாதம். அதனால் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு எதிரான செய்திகளே “விடுதலை” நாளேட்டில் வெளிவந்தன. ரயில்வே ஊழியர்கள் முழுமையாக இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவில்லை , எனினும், ஆர்.எம். எஸ். ஊழியர்கள் உறுதியாய் நின்றதால், இறுதியில் பழிவாங்கப்பட்டவர் அவர்களே பெரியார் வேலைநிறுத்தம் தவறுதான் என்றாலும் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கலாம் என்ற ஆலோசனை வழங்கினார்.

1960 ஜூலை 22-ஆம் நாள் சென்னை திருவல்லிக்கேணி கடற்கரைப் பெருமணல் வெளியில் எஸ். குருசாமி தலைமையில், பட எரிப்புக் கிளர்ச்சியில் சிறை சென்று மீண்ட தோழர்களுக்கும் பாராட்டுப் பொதுக்கூட்டம். பெரியாருடன் கி. வீரமணி எம்.ஏ. பி.எல். கலந்து கொண்டார். வீரமணி பி.எல். பட்டத்தேர்வில் வெற்றி பெற்றிருந்தார். திராவிடர் கழக மத்திய நிர்வாகத்தின் செயலாளர்களாக அவரும், ஆனைமலை ஏ.என். நரசிம்மன் பி.ஏ. அவர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். திராவிட முன்னேற்றக் கழகம் 1-8-60 அன்று கோடம்பாக்கத்தில் ஒரு இந்தி எதிர்ப்பு மாநாடு கூட்டியது. ஜனாதிபதிக்குக் கருப்புக் கொடி காட்டுவதாக அங்கு முடிவாயிற்று மேயரிடம் முதல் கருப்புக் கொடியைத் தந்தார் அண்ணா . ஆனால் மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவரான ஈ.வெ.கி. சம்பத் எம்.பி பிரதமர் நேருவுக்கு எழுதிய கடிதத்துக்கு, நேரு உடனே பதிலளித்து தமது பழைய வாக்குறுதி நிலையானதென்றும், இந்தி திணிக்கப்பட மாட்டாது என்றும் கூறியிருந்தார். மேலும், குடியரசுத் தலைவராக டாக்டர் ராஜேந்திரபிரசாத்தும், 5-8-60 அன்று, இந்தி எவர் மீதும்