பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

322


செய்வதற்குச் சட்டசபைக்கோ நாடாளுமன்றத்துக்கோ செல்வதால் சாதிக்கக் கூடியதாகிவிடாது. ஏன்? ஆட்சி இந்தக் காரியங்களைச் செய்யக் கூடாது என்று அரசியல் சட்டம் தடுப்பதில்லை ; செய் என்று நிர்பந்தப்படுத்த இயலாதபடி மட்டுமே அந்தச் சட்டம் அமைக்கப் பட்டிருக்கிறது. உதாரணமாக, ஒரு பார்ப்பான்தானே தனது உச்சிக் குடுமி, பூணூலை எடுப்பதில் அவனுக்கு எவ்விதத் தடையுமில்லை, ஆனால் சாதித் திமிரைக் காட்டும் அவனது உச்சிக் குடுமியைக் கத்தரித்து விடு என்றோ பூனூலை அறுத்து எறிந்து விடு என்றோ சொல்ல நமக்கு அதிகாரம் கிடையாது. ஆகவே இக்காரியங்கள் செய்யப்படுவதற்குக் கிளர்ச்சிகள்தான் தேவை; “சட்டசபை, பார்லிமெண்டு செல்வது தேவையில்லை. சட்டத்தால் சாதியை ஒழிக்க முடியாது என்பது இன்றைய நிலைமை” - என்று பெரியார் பேசினார், எழுதினார்.

1961-ஆம் ஆண்டு துவக்க நாளிலேயே பெரியார் தமது புத்தாண்டுக் கோரிக்கை போலத் திண்டுக்கல் பொதுக்கூட்டத்தில் ஒன்று ஆசைப்பட்டார். அதாவது தமிழன் உருப்பட வேண்டுமானால் காமராசர் ஆட்சி மேலும் பத்தாண்டுகளுக்கு நீடிக்க வேண்டுமென்றார். பார்ப்பனப் பத்திரிகைகள் மறைமுகமாகக் காமராசர் ஆட்சிக்குத் தொல்லை தருவதைப் பொறுக்க முடியாமல் திருச்சியில் இதற்காகவே 9-1-61 அன்று ஒரு கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தினார். 29-1-61-ல் சென்னை திருவல்லிக்கேணி கடற்கரை வரை 5 மைல் நீள ஊர்வலமும், பொதுக் கூட்டமும் நடத்தினார். “மெயில்” என்னும் பார்ப்பன ஏட்டின் குறும்புகள் எடுத்துக் காட்டப் பெற்றன. 15, 16 நாட்களில் பெரியார், பெங்களுரில் ஊர்வலம், பொதுக்கூட்டம் ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றபோது, அவருக்கு வெள்ளியாலான கத்தி, குத்தூசி ஆகியவை பரிசளிக்கப்பட்டன. 3.1.61 அன்று திருமதி குஞ்சிதம் குருசாமி சென்னை மாநகராட்சியின் கல்வி அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்றார். கல்வித்துறை இயக்குநர் நெ. து. சுந்தர வடிவேலுவுக்குக் குடியரசுத் தலைவரால் பத்மஸ்ஶ்ரீ என்ற விருது வழங்கப்பட்டது. திருச்சியில் 22.1.61 அன்று நடைபெற்ற திராவிட மாணவர் மாநாட்டுக்குத் தலைவர் கிள்ளிவளவன், திறப்பாளர் சின்னப்பன், பேச்சாளர்கள் ஆனைமுத்து, செல்வேந்திரன், முத்து செழியன், புலவர் ராமநாதன் ஆகியோர். 1961 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சென்சஸ் கணக்கில் “எல்லோரும் நாத்திகர் என்றே சொல்லுங்கள். 50 லட்சம் பேராவது நாத்திகர் இருக்க வேண்டாமா?” என்ற உணர்வூட்டும் செய்தி “விடுதலையில்” வெளிவந்தது. வடநாட்டில் பஞ்சாபி சுபா கோரிக்கைக்காக மாஸ்டர் தாராசிங் சிறையிலிருந்தார். சாந்த் படேசிங் பட்டினிப் போராட்டம் நடத்தினார். நேரு பெருமகனார் மனமிரங்கி 4-1-61 அன்று தாராசிங்கை விடுவித்து,