பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

324


காங்கிரஸ் கட்சிச் சட்டமன்ற உறுப்பினர்கள் பெருவாரியாகக் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. பாளையங்கோட்டை நகரசபையிலும் பெரியார், காமராசர் படத்தை 13.3.61 ல் திறந்து வைத்தார். மத்தியில் உள்துறை அமைச்சராயிருந்த பண்டித கோவிந்த வல்லப பந்த் 6.3.61ல் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் மனுநீதி, கீதை, இராமாயணம் போன்றவை பட்டாசுபோல் கொளுத்தப்பட வேண்டியவை என்று பேசினார் பெரியார். பேராவூரணி வி.எஸ். குழந்தையின் மகன் லெனின் திருமணம் 5.2.61 அன்று புதுக்கோட்டையில் பெரியார் தலைமையில் நடந்தது. 19.2.61 வேலூர் ஈ. திருநாவுக்கரசு மணி விழாவிலும் பெரியார் வாழ்த்தினார். இங்கிலாந்து அரசி எலிசபெத்தும், அவர்தம் கணவர் எடின்பரோ கோமகனும் 19.2.1961 சென்னை வருகை தந்தனர். தமிழ்நாட்டை மிகவும் விரும்புவதாக அவர்கள், முதலமைச்சர் காமராசரிடம் செய்தி விடுத்தனர். சட்டசபை மண்டபத்தில் காமராசருக்குச் சிலை எடுக்க வேண்டும் என்று பெரியார் கருத்தறிவித்தார்.

மதுரை தியாகராயர் கல்லூரியில் 13.3.61 அன்று சிந்திக்கின்ற தன்மையில்லாததால் தமிழர் சமுதாயத்துக்கு வந்த கேடுகளை விளக்கினார் பெரியார்: “மகான் சொன்னது, ரிஷி சொன்னது, அவதார புருடர்கள் சொன்னது என்று பார்க்கிறோமே தவிரப் புத்தி என்ன சொன்னது, என்று பார்ப்பதில்லை. ஒரே மனிதனுக்கே வயதுக்கு வயது, ஆண்டுக்கு ஆண்டு அறிவு வளர்ந்து, புத்தி மாறும் போது, 2000, 3000 ஆண்டுகளுக்கு முன்பே யாரோ சொன்னது இன்று பொருந்துமா? மனிதன் நடந்து கொள்ள வேண்டிய முறைகள், ஒழுக்கங்கள் என்ன என்று, யாரோ முனிவரும் ரிஷியுமா சொல்வது? யார் இவர்கள்? இந்த ரிஷிகளின் பிறப்பு, அவர்களே எழுதியுள்ள படி எவ்வளவு அசிங்கம்? கலைக் கோட்டு முனிவர் மானுக்கும், ஜபுகர் நரிக்கும், கவுதமா மாட்டுக்கும், மாண்டவ்யர் தவளைக்கும், காங்கேயர் கழுதைக்கும், கணநாதர் கோட்டானுக்கும், சவுகனர் நாய்க்கும், சுகர் கிளிக்கும், ஜாம்பவான் கரடிக்கும், அசுவத்தாமா குதிரைக்கும் பிறந்தார்கள் என்று புராணங்களில் எழுதி வைத்துக் கொண்டு இருக்கின்றனர். இவர்கள் நமக்கு வழிகாட்டிகளா?

ஆத்திகன் என்பவன் அறிவில் நம்பிக்கை வைக்காமல், சாஸ்திரம் புராணங்களை அப்படியே ஒப்புக் கொண்டு, ஆராயாமல் நடப்பவன். நாத்திகன் என்பவன் ஞானி, அறிவாளி, நீதியில் நம்பிக்கள் வைப்பவன், அறிவை உபயோகப்படுத்துகிறவன்” என்று விளக்க முரைத்தார் பெரியார், தொடர்ந்து மேலும் பேசுகையில் “நான் எதையும் முதலில் நன்கு தெரிந்து கொண்டு, எதையும் நிர்வாணமாகப் பார்த்தும், பிறகு வெளியில் எடுத்துச் சொல்லுகிறவன். ஒரு மனிதன் வர்ணிப்பது என்றால், அவன் ஆடை, நாமம் இவைகளை