பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

325

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


மட்டுமல்லாமல்; இவற்றுக்கு உள்ளே இருக்கின்ற அவனது கை கால் முதலிய அங்க அவயங்களை வர்ணிப்பதுதான் என்பது போல, நான் உண்மைகளை விளக்குகிறவன்” என்றார்.

மத்திய உள்துறை அமைச்சராகப் புதிதாய் வந்த லால் பகதூர் சாஸ்திரி ‘வகுப்புத் தகராறு தூண்டுவோர், தேசிய அய்க்கியத்தையும் ஒற்றுமையையும் கெடுப்போர் ஆகியோர் மீது தடுப்புக் காவல் சட்டத்தைப் பிரயோகிக்கலாம்.’ என ஆலோசனை கூறியது மிரட்டலாகவே தோன்றியது. பெரியார் எழுதிய “காமராஜரை ஆதரிப்பது ஏன்?“ என்ற புத்தகம் ஒன்று வெளியாகியிருந்தது. 3.4.61ல் சேலம் நகரசபைகளிலும் காமராசர் படத்தைப் பெரியார் திறந்தார். “எனக்கு வயது முதிர்ச்சியால் இந்திரியங்கள் சக்தி குறைந்து விட்டது. நடக்க முடியவில்லை . 11 மணி நேரத்திற்கு மேல் பேசுவது கஷ்டமாக இருக்கிறது ! என்னுடைய வேன் மிகவும் அசிங்கமாக இருக்கிறது. புதிதாக ஒரு வேன் அல்லது கார் வேண்டும்.” என்ற பெரியாரின் வேண்டுகோள் 24.3.61 “விடுதலை” யில் பெட்டிச் செய்தியாக வந்திருந்தது. உடனே தென்னார்க்காடு மாவட்ட திராவிடர் கழகம் பெரியாருக்குப் புதிய கார் வாங்கித் தர முடிவு செய்தது. கழகத்திற்கு நிறைய உறுப்பினர்கள் சேர்க்க வேண்டுகோள் விடுத்தார் பொது செயலாளர். குமாரபாளையத்தில் பெரியாருக்கு மணிமகுடம் எனும் அழகிய கிரீடம் சூட்டி அழகு பார்த்தனர். 2.4.61 அன்று 9 வாரம் சிறைத்தண்டணை அனுபவித்த குருசாமி, 4.4.61 அன்று திருச்சியில் விடுதலையாகி, நேரே பெரியாரைச் சந்தித்து வணங்கினார். கோவையில் 50 ஏக்கர் நிலமும், லட்சரூபாய் பணமும், நாட்டு மருத்துவ ஆராய்ச்சிக்காக ஜி.டி நாயுடு வழங்கினார். 13.4.1961 முதல் அரசு இலாக்கா அனைத்திலுமே தமிழ் வழங்குமென ஆணை இடப்பட்டது.

1961 ஏப்ரல் 19 ஆம் நாள் ஈ.வெ.கி சம்பத் தன் தோழர்கள் சிலருடன் தமிழ் தேசியக் கட்சியைத் துவங்கினார். குளித்தலைப் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் காமராசர் கிராமப் புறங்களில் சென்றபோது, சில தாய்மார்கள் தமது கால்களில் விழுந்து வணங்கியதை வன்மையாகக் கண்டித்து, “இப்படிச் செய்தால் தான் ஏதோ உயர்ந்தவன். நீங்கள் என்னைவிடத் தாழ்ந்தவர்கள் என்று அர்த்தமாகிவிடும். வேண்டாம் இந்தப் பழக்கம்!” என்றார். தாம் இன்னும் கொஞ்ச நாளைக்கு உழைக்க வேண்டுமென்று ஆசைப்படுவதால் சில கட்டுத் திட்டங்களை அறிவித்துத் தோழர்கள் கட்டுப்பாட்டுடன் அவற்றைக் காப்பாற்றுமாறு கேட்டுக் கொண்டார் பெரியார். இந்தப் பெரிய அறிக்கை 25.4.61 அன்று, பெரியார் அறிவிப்பு என்ற தலைப்பில் வெளியானது. உடல் நலம் குன்றி அஜீரணமும் மலக்கட்டும் ஏற்பட்டுள்ளது. அதனால் அவசியம் பயணிகள்