பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

346


கிருஷ்ணமேனன் விலகி, பம்பாயிலிருந்து ஒய். பி. சவாள் பாதுகாப்பு அமைச்சராகப் பொறுப்பேற்றார். ராஜாஜி பம்பாயில் பேசும்போது, வருணாசிரம் அமைப்பு முறைகளும் சாதிகளும் இருக்கு வேண்டியதுதான் - என்று பேசினார். தமிழ்நாட்டு அமைச்சர் ஆர். வெங்கட்ராமனே, பூச்சாரியார் தேசிய அரசு அமைய வேண்டும் என்றும் சீனப் பிரச்சினையை அய், நா. சபைக்கு எடுத்துச் சென்று அமெரிக்க ஆதரவு பெற வேண்டும் என்றும் சொல்லி வருவது சரியல்ல என்றார். 23. 11.62 வரை தமிழக முதல்வரின் போர்நிதி 1 கோடி ரூபாயாகத் திரண்டிருந்தது.

கரூரில் 15.12.62 நடந்த சாதி ஒழிப்பு மாநாட்டிற்குப் பெரியார் தலைமை தாங்கினார். வே. ஆனைமுத்து திறப்பாளர். மறுநாள் நடந்த திராவிடர் கழக மாநாட்டின் தலைவர். தி.பொ. வேதாசலம், திறப்பாளர் கி. வீரமணி. திருவாரூர் தங்கராசு, சிவகங்கை சண்முகநாதன், ஈரோடு அப்பாவு, காங்கிரசுக்குப் போன ஈரோடு பி. சண்முக வேலாயுதம், கம்யூனிஸ்ட் முகவை ராசமாணிக்கம், தமிழ் தேசியக் கட்சி சம்பத், கண்ணதாசன் ஆகியோர் இந்த மாநாடுகளில் பங்கேற்றனர். குடி அரசுப் பதிப்பக வெளியீடுகளான பகுத்தறிவு நூல்கள் இந்த மாநாடுகளில் மலிவாக விற்பனைக்குக் கிடைக்கும் என்று பெரியாரே அறிவித்திருந்தார்.

திருச்சி மாவட்டம் இடையாற்றுமங்கலம் தோழர்கள் முன்பு தென்னந்தோப்பு வழங்கியது போக, இப்போது வேறொரு தோப்பும், கட்டடமும் பத்தாயிரம் ரூபாய் பெறுமானத்தில் அன்பளிப்பாகச் சாசனம் செய்து தந்தனர். திருவாரூர் தங்கராசு பகுத்தறிவு என்ற வார இதழ் துவக்கி நடத்தினார். குருசாமி துரோகம் செய்து போன பின்னர்,“விடுதலை”யில் கண்ணீர்த் துளிகளைத் தாக்கி அன்றாடம் செய்தி வெளியிடும் பழக்கம் குறைந்திருந்தது. ஆனால் 26.12. 62 அன்று “தென்றல் திரை”யில் வந்த ஒரு கார்ட்டூன் எடுத்தாளப் பட்டிருந்தது; “சட்டி சுட்டிதடா கை விட்டதடா ” என்று அண்ணா திராவிட நாடு பிரச்சினையைப் போட்டு உடைப்பதாக

தேசிய அரசு அமைக்கச் சொல்ல ராஜாஜிக்கு என்ன யோக்கியதை இப்போது? - என்ற கருத்தோடு பெரியார் 1963-ஆம் ஆண்டைத் துவக்கியிருந்தார். ராஜாஜியும் சும்மாயில்லாமல், கல்கியில், திராவிட முன்னேற்றக் கழகத்தினர் திராவிடநாடு பிரச்னையைத் தூங்கப் பண்ணியிருக்கிறார்கள் என்று எழுதினார். பெரியார், நமது பழங்கால அரசர்கள் பார்ப்பன தாசர்களாக இருந்து, தமது சொத்தில் பெரும்பகுதியை மான்யமாக வழங்கியுள்ள மடமை குறித்து எழுதினார். “ மது விலக்கு மாபெரும் முட்டாள் தனம்” என்ற தலையங்கக் கட்டுரை 29.11.62 பெரியார் எழுதியதன் எதிரொலியாச் 22.1.63 அன்று கும்பகோணத்தில் மிகத் தைரியமான முயற்சியாகப்