பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

347

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


பெரியார் தலைமையிலேயே, மது ஆதரவாளர் மாநாடு ஒன்று நடத்தப் பெற்றது. புதுமையாய்த் தோன்றிற்று?

10.1.63 அன்று: “விடுதலை”யில் பெரியாரின் சீரிய அறிவிப்பு ஒன்று வெளிவந்தது. திருச்சியில் கட்டடம் ஒன்று விற்க, முன்பணமெல்லாம் பெற்றுக் கொண்ட ஒரு கட்டடச் சொந்தக்காரர். பேராசையால், தவறு செய்ய முயன்ற போது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க. அக்கட்டடத்தை இறுதியாகப் பெரியார் வாங்கச் செய்தார். அதில் தொழில் பயிற்சி நிலையம் ஒன்று ஆரம்பிக்கப்படும். 10 முதல் 16 வயது வரை உள்ள ஆண்-பெண் அநாதைப் பிள்ளைகள் விண்ணப்பம் போடலாம். சாப்பாடும் இலவசம். தச்சு, அச்சு, தையல், இயந்திர சம்பந்தமான தொழில்கள் கற்றுத் தரப்படும் - என்பது பெரியாரின் அன்பழைப்பு!

நிறுத்தப்பட்டிருந்த பெரியாரின் நகரும் வீடு' புறப்படத் தொடங்கியது 11.1.63 முதல். இந்தச் சுற்றுப் பயணம் முழுவதும் பெரியார் பேசிய பொதுக் கூட்டங்கள் யாவுமே திராவிடர் கழகச் சார்பில், சீன ஆக்கிரமிப்புக் கண்டனக் கூட்டங்களாகும். உழவர் உழைப்பின் பயனை நுகரும் அறிவுத் திருநாள் என்ற தமது பொங்கல் வாழ்த்துச் செய்தியினைப் பெரியார் விடுத்தருளினார். “விடுதலை"யில் சீனப் போர் எதிர்ப்புச் செய்திகள் - மத்திய அமைச்சர்கள் நேரு மற்றவர்களின் படங்களோடு, அன்னாரின் வீரமிக்க பேச்சுகள் - ஆகியவை பிரதான இடம் பெற்றன. பெரியார், வெளியூர்களில் பேசிய கூட்டச் சொற்பொழிவுகள் பெரும்பாலும் ஒரு வாரம் கழித்தே வெளியாகி வந்தன.

தமிழ் தேசியக் கட்சித் தலைவர் சம்பத் உடல் நலமின்றி மருத்துவ மனையிலிருந்து, 17.1.63 அன்று இல்லம் திரும்பியதாக அவரது “தமிழ்ச்செய்தி” கூறிய செய்தியினை“விடுதலை” எடுத்தாண்டிருந்தது. சுயமரியாதைச் சுடரொளியும், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும், தமிழாய்ந்தவருமான தோழர் ப. ஜீவானந்தம் 18.1.63 அன்று காலை 6-30 மணிக்கு சென்னைப் பொது மருத்துவமனையில் இயற்கை அடைந்தார். பின்னாளில், பெரியார் ஜீவாவின் படத்தினைத் திறந்து வைத்துப் பாராட்டியதோடு, அன்னாரின் சிலை அமைக்கப்பட விருப்பதாக பாலதண்டாயுதம் செய்தி சொன்னவுடன், ரூ.150நன்கொடையும் வழங்கினார்.

தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் 1962-ல் சம்பத் போட்டியிட்டபோது, பெரியார், அங்கு யாரையும் ஆதரிக்கவில்லை. இந்த நிலைக்கு முரணாக குருசாமி “விடுதலை”யில் சம்பத்தைக் தாக்கி வந்தார், நேரிடையாகவும் மறைமுகமாகவும், திராவிடர் கழகத்தில் சம்பத்தின் ஆதிக்கம் வந்து விடுமோ என்று அவர் அஞ்சினார். பெரியார் விரைவில் மறைந்து விடுவார்; பிறகு தாமே தலைவர், வாரிசு