பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

352


கிளர்ச்சியை நடத்த இருந்தார். 28.4.63 அன்று அவர் கைது செய்யப்பட்டு 4.3.63 அன்று விடுதலை செய்யப்பட்டார். நேரு புதி உறுதிமொழி ஒன்றைத் தெரிவித்தார். அதன்படி, 12 ஆண்டுகட்குப் பின்னர் ஆட்சி மொழி பற்றி ஆராயும் குழுவில் இந்தி பேசாத பகுதியைச் சார்ந்த பிரதிநிதிகள் அதிகம் இருப்பார்கள் என்பதே அது.

மன்னார்குடியில் வட்ட திராவிடர் கழகக் கட்டடத்துக்காகப் பெரியார், தாமே 1000 ரூபாய் வழங்கி, மேலும் நிதியளிக்குமாறு வேண்டுகோளும் வெளியிட்டார். நான்குனேரி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காகப் பெரியாரும் “விடுதலை" ஆசிரியர் கி. வீரமணி எம்.ஏ.பி.எல்., அவர்களும் மே 8 முதல் 10 வரை சுற்றுப்பயணம் செய்தார்கள். ஆச்சாரியாரால் என்னை, அதாவது சுயமரியாதைக் கொள்கையை அழிக்க முடியவில்லை அந்த ஆத்திரத்தில் தான் அவர் காமராசரை ஒழிக்கப் பார்க்கிறார். இங்கே இந்தி எதிர்ப்பு வீரராகத் காட்சி தருகிறாரே, அவரது சுதந்திரக் கட்சியின் கொள்கை அதுவா என்றால், இல்லை. கண்ணீர்த்துளிகள் இந்த மண் குதிரையை நம்புகிறார்களே - என்று பெரியார் உண்மை நிலவரத்தை விவரித்தார். இந்தியைத் தடுக்க முடியாவிடில் பதவி துறப்பேன் என்று வீர முழுக்கமிட்டார் காமராசர்.

மே, ஜூன் மாதங்களில் பெரியார் நிறைய திருமணங்களை நடத்தி வைத்தார். சுயமரியாதை முறைத் திருமணங்களைத் தமிழ் நாட்டில் அறிமுகப்படுத்திப் பெரியார் மகத்தான சாதனை புரிந்திருக்கிறார்; உயர்நீதி மன்றம், சுய மரியாதைத் திருமணம் சட்டப்படிச் செல்லாதெனத் தீர்ப்பு வழங்கிய பின்னும், அவரது சுயமரியாதை முறையிலான திருமணங்கள் பத்தாயிரத்துக்கும் அதிகமாக நடந்து வருகின்றன. பெரியாரே இந்த வெற்றிகளுக்கெல்லாம் காரணகர்த்தா - என்று 14.5.63 "லிங்க்" ஆங்கில இதழ் பாராட்டுக் கட்டுரை தீட்டியது. சிங்கப்பூர் திராவிடர் கழகம் தனது 16வது ஆண்டு விழாவினை மே முதல் நாள் சிறப்புடன் நடத்தியது. தாயகம் சென்று திரும்பிய மாயூரம் நாகரத்தினம் கழக வளர்ச்சி பற்றி விளக்கினார்.

இந்தி எதிர்ப்புக்குழு ஒன்று - சுதந்திரா, தி.மு.க., முஸ்லிம் லீக் கட்சியைக் கொண்டு அமைக்கப்பட்டது. ஏன் பிற எதிர்ப்புக் கட்சிகளை இணைக்கவில்லையென "விடுதலை" கேலி செய்தது தற்கால அரசியல் நிலை என்ற தலைப்பில் சென்னைக் கடற்கரையில் டி.எம். சண்முகம் எம்.சி. தலைமையில் பெரியாரும் வீரமணியும் 2.6.63 அன்று விளக்கமளித்தனர்: ஜூன் முதல்தாள், தேனாம்பேட்டை பிள்ளைப் பேறு விடுதி ஒன்று சென்னை மாநகராட்சியால் அமைக்கப்படவிருத்ததற்குப் பெரியார் அடிக்கல் நாட்டினார். திராவிடர் கழக சென்னை மாவட்டத்