பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

355


தாங்களாகவோ, பிறர் அறிவித்த கருத்துக்கிசையவோ, முதலமைச்சர் பொறுப்பு நீங்குதல் - தமிழர்கட்கும், தமிழ் நாட்டுக்கும், தங்களுக்கும் தற்கொலைக்கொப்பானதேயாகும் என்பதே வாசகம் 10.8.63 அன்று மயிலை வீரப்பெருமாள் கோயில் தெருவின் கூட்டத்தில் பேசுங்கால், பெரியார், காமராசர் போல் வேறு ஆள் கிடையாது. சீனப் படையெடுப்பு நேரத்தில், பொதுவாகவே முதலமைச்சர்கள் பதவி விலகுவது பைத்தியக்காரத்தனம். தேசப்பற்று, தேச ஒற்றுமை இவைகளைவிட மானந்தான் முக்கியம் என்றார். இதே கருத்தைப் பன்னிரண்டாந் தேதி "விடுதலை"யிலும் தலையங்கமாக வெளியிட்டார்.

திருவாரூர் தங்கராசு நடத்திய பகுத்தறிவு இதழில் - அடுத்த முதல்வராக பக்தவத்சலம் வரக்கூடாது என்ற கருத்து வெளியிடப் பட்டிருந்தது. 17.8.63 அன்று பெரியார் ஓர் அறிக்கையில் இது என் கருத்தல்ல; காமராசர் யாரை ஏற்படுத்தினாலும் வரவேற்கத்தக்கது என்று கூறியிருந்தார். பெரியார் அடுத்துத் தமது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் நிறையக் கூட்டங்களில் பேசினார். செப்டம்பர் 30-ஆம் நாள் தாம் பதவி விலகுவதாகவும், புதிய தலைவர் அக்டோபர் 2-ஆம் நாள் தேர்ந்தெடுக்கப்படுவாரென்றும், காமராசர் 28.8.63 அன்று செய்தியை வெளியிட்டார். நீலகிரி மாவட்டத்தில் காமராஜ் சாகரை 7.9.63 அன்று ஆர். வெங்கட்ராமன் தலைமையில் காமராசரே திறந்து வைத்தார்.

நாடாளுமன்றத்தில் நேரு அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்டது. இதைக் கண்டித்துப் பெரியார், வீரமணி, ஆனைமலை நரசிம்மன் ஆகியோர் திருச்சியில் டி.டி.வீரப்பா தலைமையில் 31.8.63 அன்று பேசினார்கள். ஆனால் ராஜாஜியோ, நாடாளுமன்றத்தையே கலைத்து விட்டு ஜனாதிபதி ஆட்சியை நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டுமென்று சுயராஜ்யா இதழில் எழுதினார். செப்டம்பர் 8-ஆம் நாள் சென்னைக் கடற்கரையில் பெரியார், சமூக விரோதிகள் என்ற தலைப்பில் பேசினார். தமிழர்களுக்கு வேலை வாய்ப்புக் குறைந்து போய்விட்டது. பார்ப்பானும் அவனுக்கு அடுத்ததாக மலையாளியும் தமிழ் நாட்டை ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டார்களே - என்றார் பெரியார். 12-ம் நாள் சென்னை மாநிலக் கல்லூரியில் பெரியார், சென்னைக் கல்லூரிகள் தமிழ் மன்றத்தில் சொற்பொழிவாற்றினார். சென்னை பெரியார் திடலில் அமைக்கப்பட்ட ராதா மன்றத்தைப் பெரியார், சபாநாயகர் செல்ல பாண்டியன் தலைமையில், 17.9.63 அன்று திறந்து வைத்தார். பெரியாரின் 85-ஆவது பிறந்தநாள் விழாவில் சம்பத், வீரமணி, ராதா, தங்கராசு, டி.எம். சண்முகம் பங்கேற்றனர்.

பெரியார் தமது 85 ஆவது பிறந்த நாள் செய்தி வழங்கினார்:“நம்மக்கள் 100க்கு 90 பேர் எழுத்து வாசனை அற்றவர்கள். படித்த