பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

375


தூண்டி விட்டு, நாடெங்கும் அராஜகமும் காலித்தனமும் நடைபெறுவதாக, “விடுதலை" கூறியது. முன்னதாக, 25ந் தேதியே தி.மு.க. தலைவர்கள் கைதானார்கள். கருப்புக் கொடி ஏற்றப்பட்ட வீடுகளில் சுதந்திரங் காக்கும் படையினர் கலவரம் செய்து, போலீசார் துணையுடன் கொடிகளை இறக்க முயன்றார்கள். அப்படி ஒரு முயற்சியில், துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக, இலட்சிய நடிகர் எஸ். எஸ். ராஜேந்திரன், நடிகமணி டி.வி. நாராயணசாமி இருவரும் வழக்குக்கு ஆட்பட்டனர். முதலமைச்சர் பக்தவத்சலம், உரிய முன்னேற்பாடுகள் செய்யாமல், அலட்சியமாயிருந்து விட்டுப், பின்னர் அடக்கு முறையை அவிழ்த்து விட்டார். போலீஸ் போதாமல், ராணுவமும் சுட்டது பிப்ரவரி 12-ல்.

1965 ஜனவரி 25 முதல் பிப்ரவரி 13 வரையில் தமிழகத்தில் நிலவிய நிலைமைக்கு வரலாற்று ஆசிரியர்கள் என்ன பெயர் சூட்டுவரோ- பெரியார், இதை எழுச்சி என்று ஒத்துக் கொள்ளத் தயாராயில்லை. மொழிக்காக மாணவர்களால் நடத்தப்பட்ட போராட்டம் என்றும் நம்பத் தயாராயில்லை. தமிழ் நாடு முழுவதும் மூன்று நாட்களுக்கு ரயில்களே ஓடாத நிலைமை இதற்கு முன்னுமில்லை, பின்னுமில்லை! ‘இந்தி ஒழிக’ என்று பொறிக்கப்படாத வாகனங்களே தெருக்களில் நடமாட முடியவில்லை ; சொல்லாத மனிதர்களே வீதிகளில் நடமாட முடியவில்லை ; பெரிய மனிதர்களையே காணோம்! இளைஞர்கூட அல்ல; சின்னஞ்சிறார்கள் நாட்டையே ஆக்கிரமித்து. ஆட்சி புரிந்தனர்! ராஜாஜியோ, அண்ணாவோ, மாணவர் கிளர்ச்சியைத் தூண்டவுமில்லை; இப்படி நடக்குமென எதிர்பார்க்கவுமில்லை! அரசினரே இந்நிலையை எதிர்பார்க்கவில்லையே!

“இந்தியைத் திணிப்பதில்லையென அன்றே காமராசர் எனக்கு எழுதித் தந்திருக்கிறாரே! அந்த உறுதி மொழியை அரசினரும் மீறாத போது, ஏன் கிளர்ச்சி செய்ய வேண்டும்? பதவியைப் பிடிப்பதற்காகக், கண்ணீர்த் துளிகள் செத்த பாம்பை எடுத்து ஆட்டு கின்றனர்” என்று பெரியார் அரசாண்ட நல்லூரில் 1965 ஜனவரி 19-ம் நாள் பேசியது, பிப்ரவரி 1-ஆம் நாள் “விடுதலை”யில் வெயிடப் பட்டது. ஜனவரி 26 குடியரசு நாடான்று சென்னைக் கடற்கரையில் பேசிய அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் காமராசர், மத்திய துணை அமைச்சர் அழகேசன், தமிழக முதலமைச்சர் பக்தவத்சலம், அமைச்சர் வெங்கட்ராமன் ஆகியோர் “சட்டப்படி இந்தி கட்டாயமில்லை. இது தி.மு.க. தூண்டுதல்” என்று அபாண்டமாகக் குற்றஞ்சாட்டினர். சண்டிகாரில் பேசிய பிரதமர் சாஸ்திரி, ஆங்கிலம் நீடித்து வரும்போது வீண் கிளர்ச்சி ஏன்?" என்றார். உள்துறை அமைச்சர் நந்தா உறுதிமொழி தந்தார். பெங்களூரிலிருந்து காமராசர் “இந்திக்காரர்கள் அவசரப்