பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

380

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்துப் பேசவும் புறப்பட்டு விட்டார்.

26.5.6 அன்று மதுரை முத்து குழுவினர் ஐவருக்குச் சிறைத்தண்டனை. மு.கருணாநிதி, என்.வி. நடராசன் இருவருக்கும் ஆறுமாத தண்டனை செஷன்ஸ் கோர்ட்டில் ஊர்ஜிதமாயிற்று. கருணாநிதி வேறு வழக்கில் பாளையங் கோட்டைத் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். “கருணாநிதியை விடுதலை செய்“ என்று ஒரு சுவரொட்டியும், பக்கத்திலேயே, “கொலை கொள்ளை தீயிடல் அரசியலாகாது, அறமும் அன்று, குற்றம் புரிந்தோரை விடாதே!” என்று வேறொரு சுவரொட்டியும் ஒட்டப்பட்டிருந்தன- என்று “விடுதலை” செய்திகளை வெளியிட்டது!

“தருமபுரி வோட்டர்களே, உஷார்! கலவரக்காரர்களை ஆதரிக்காதீர்! - கண்ணீர்த்துளிகள் கூட்டுச் சதிக்கு இடந்தராதீர்!“ என்று ”விடுதலை“ எச்சரித்தது. “1963ல் வல்லவரே! நல்லவரே! வழி காட்டுங்கள்! என்றார்கள்” என்றும் “விடுதலை” சுட்டிக் காட்டியது. தர்மபுரியில் 35, 863 வாக்குகள் பெற்றுக் காங்கிரஸ் வென்றது; 24,000 வாக்குகள் பெற்றுத் தி.மு.க. தோற்றது. பெரியாரும், காமராசரும், சம்பத்தும் பத்திரிகைகளைச் சாடினார்கள்! பெரியாரோ- “தர்மபுரி ஜஸ்டிஸ் கோட்டையாகும். அதனால்தான் ஜெயித்தது. காங்கிரஸ் காரர்களே! மூட நம்பிக்கைகளை ஒழித்திடுங்கள் நெற்றியைச் சுத்தப்படுத்துங்கள்! பகுத்தறிவில்லாமல் சமதர்மம் நிலைக்காது!” என்றார். “பார்ப்பானை பிராமணன்! என்று சொல்கிறவன் முட்டாளாக இருக்க வேண்டும். அல்லது தன்னைக் கீழ்மகன், நாலாம் சாதி என்று ஒப்புக் கொண்டவனாக இருக்க வேண்டும்!” “கோயிலுக்குள் உருவச்சிலை இருக்கும் (கர்ப்பக் கிரகம்) இடத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படாதவன், “சாமி கும்பிடக் கோயிலுக்குச் செல்வது, தன்னை இழி பிறவி, கீழ்மகன் என்பதை ஏற்றுக் கொள்வதாகும்" இவ்வாறு சுவரொட்டிகள் ஒட்டுமாறு, பெரியார் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த ஆண்டின் வேலைத் திட்டமாக, ராமநவமியன்று, கம்பராமாயணம் என்று ஒரு காகிதத்தில் எழுதித் தீயிட்டுச் சாம்பலை விவரத்துடன், “விடுதலை“ அலுவலகத்திற்கு அனுப்புமாறு, பெரியார் ஆணையிட்டார், ஏப்ரல் 8, 9தேதிகளில்! அதன்படியே, சுவர்களில் சாம்பல் பொதித்துப் பத்தாந் தேதி முதல், “விடுதலை” அலுவலகத்துக்கு அஞ்சல் வந்து குவிந்தது தமிழ்நாடு எங்கணுமிருந்தது! “வருணாசிரம தர்மம் தழைக்கிறது எப்போதோ, அப்போதுதான் பாரதம் ஷேமம் அடையும்” என்று சங்கராச்சாரியார் கூறியதை, மறுத்துக் கண்டித்து, “இது அறிவின்மையா? ஆணவமா?“ என்று பெரியார் கேட்டார். “ஐகோர்ட்டும் அரசாங்கமும்” என்ற