பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

384

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


உரிமை நம் பிறப்புரிமை; அதில் கைவைக்காதீர்கள், என்றும் அரசை எச்சரித்தது. “கடவுள் நம்பிக்கை ஒழிந்தால், சாதியும் தானே ஒழியும்!” என்றார் பெரியார். “ராஜாஜி புராணக் கருத்துகளில் அழுத்தமான நம்பிக்கை கொண்டவர். அதை விட்டு விட்டு, அவர் எங்களுடன் சேரவில்லை. அது போலவே நாங்களும் எங்கள் கொள்கையை விட்டு விட்டு, அவர் கருத்தை ஏற்றுக் கொண்டு விடவில்லை” என்பதாக, 11.7.65-ல் அண்ணா சொன்னார்: ஆறுதலான செய்தி! பெரியாரின் “தகுதி திறமை பேசும் அயோக்கியத்தனம்” என்ற தொடர் தலையங்கத்தின் 3-ம் பகுதியில், பணம் கொடுத்து, மார்க் வாங்கிப் பாஸ் செய்கிற மோசடி பற்றிப் பெரியார் விளக்கியிருந்தார்.

“காமராசர் பல்லாண்டு வாழ்க” என்று 15.7.65 அன்று, அவரது 63- வது பிறந்த நாளில், “விடுதலை“ வாழ்த்துக் கூறியது. “திருச்சியில் 1,26,000 ரூபாய் வழங்கியதைப் பெற்றுக்கொண்டு, ”காங்கிரசை முறியடிக்க யாராலும் முடியாது மற்றக் கட்சிகளிடம் ஒரு திட்டமும் இல்லையே!” என்றார் காமராசர். “கண்ணீர்த் துளிகளுக்கு ஆட்சி நடத்த யோக்கியதை ஏது? அதனால் இந்த முறையும் காங்கிரஸ் வெற்றி உறுதிதான்!” என்று எழுதினார் பெரியாரும் சம்பத்தும் சுற்றுப் பயணங்கள் தொடர்ந்தார். காமராசர் சமகர்மப் பிரசாரப் பயணத்தைத் தொடங்கினார். அடுத்த ஆண்டும் அகில இந்தியக் காங்கிரசுக்குத் தலைவராகக் காமராசரே நீடிக்க வேண்டும், என்ற கருத்து பலமாக இருந்ததால், அதற்கேற்பக் காங்கிரசின் விதிகளைத் திருத்த முயன்ற போது, பெங்களூரில், மொரார்ஜி தேசாய் தமது மனச்சாட்சி இடத்தரவில்லையென மறுப்புத் தெரிவித்தார். மொரார்ஜி பார்ப்பனரானதால், துரோக புத்தியும் பழி வாங்கும் உணர்ச்சியும் கொண்டிருப்பதாகப் பெரியார் எடுத்துரைத்தார்.

தம்முடைய மணிவிழாவில், பல்வேறு நல்ல பணிகளுக்காகப் பத்து வட்சம் ரூபாய் வழங்கிய செட்டி நாட்டரசர் ராஜா சர் முத்தையச் செட்டியார் அவர்களுக்குத் திருச்சியில் ஒரு விழாவில் பெரியார் பொன்னாடை போர்த்தினார். பெரியாரும் மணியம்மையாரும் தோழர்களுடன் சென்னையில் ராஜா சர் இல்லம் சென்று, அவருக்கு நேரில் வாழ்த்துக் கூறினார்கள். 2.8.1965 “விடுதலை”யில் பெரியார் மிக்க மனவருத்தத்துடன் நமது முதல்வர்' என ஒரு தலையங்கக் கட்டுரை தீட்டினார். "எஸ். எஸ். எல்.சி. தேறியவர்கள் எல்லாருக்குமே கல்லூரியில் இடந்தரமுடியுமா? என்று நமது முதலமைச்சர் கேட்டாராம்! எந்த நாட்டிலும் ஜாதிகள் இல்லையே? இங்கு எப்படியும் பார்ப்பான் 100க்கு 100 இடம் பெற்றுவிடுவானே? நம்மவனுக்குத்தானே இடம் கிடைக்காது? இமய உச்சிக்கும், பசிபிக் ஆழத்துக்கும் ஒப்பிட முடியுமா? இந்த மாகாணத்தில் வருடந்தோறும் கல்விக்காகச் செலவழிக்கிற 40 கோடி ரூபாயில், இந்த நாட்டுக்கு