பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

389


நம்மிடையே ஒழுக்கம் நாணயம் இராமலும் இப்படியே இருந்தால், நாமும் மடையர்களாகத்தான் இருந்து வருவோம்”- என்று எழுதினார். இல்லஸ்ட்ரேட் வீக்லி“ என்னும் ஆங்கில இதழாசிரியர் எ.எஸ். இராமன் என்னும் பார்ப்பனர், அண்ணாவை பேட்டி கண்டார். இ.மு.க.வில் பிராமணர் சேரலாமா என்ற கேள்விக்குப் பிராமணர் சேருவதை வரவேற்கிறேன் என்றும், ராஜாஜி சேருவதானால் அவருக்கு உங்கள் கட்சியின் தலைமையான பதவியைத் தருவீர்களா என்னும் வினாவுக்கு, ஆம், அது தி.மு.க.வுக்குச் சிறப்பான நாளாகும் என்றும், அண்ணா பதில் கூறியிருந்ததை, 30.9.65 “விடுதலை” எடுத்தாண்டு, “நவீன விபீஷண சரணாகதி” என மகுடமிட்டிருந்தது. சீனா, பாகிஸ்தான் படையெடுப்பில் இந்திய அரசுக்கு விரோதமான கருத்துக்களைக் கூறி வந்ததால் திண்டிவனத்தில் ராஜாஜியின் “சுயராஜ்யா“ “கல்கி” இதழ்களுக்குத் தீயிடப்பட்டது. பின் சென்னை அலுவலக எதிரில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

2.10.65 அன்று, புதிதாக அமைந்த தர்மபுரி மாவட்டத்தை முதலமைச்சர் துவக்கி வைத்தார். கோவையில் அக்டோபர் 3-ம் நாள், விஞ்ஞான மேதையும் தொழில் முனைவருமான ஜி.டி.நாயுடு, ஓர் ஒப்பற்ற புதுமையினைப் புகுத்தினார். பெரியாருடைய தொண்டுக்குக் கிடைத்த பலன்; வேறெங்கோ போக வேண்டிய பணம் தொழிற் கல்விக்கு வருகிறது, என்று நாயுடு குறிப்பிட்டவாறு, அவரது நிர்வாகத்தில் அமைக்கப்பட்ட, சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சார்ய வித்யா தீர்த்த சுவாமிகள் பயிற்சிப் பள்ளியைப் பெரியார் திறந்து வைத்து, “நான் என் Policy மாற்றுவதுண்டு. ஆனால் என் Principle என்றும் மாறாது. எனது தொண்டினால் சங்கராச்சாரிகள் மனமாற்றம் காக்க நான் பெருமைப்படுகிறேன். அவரது உதவி, தொழில் கல்விக் கூடத்துக்குக் கிடைத்தது பற்றி மகிழ்ச்சியடைகிறேன். இதைப் பயன்படுத்திக் கொண்ட நாயுடுகாரு பாராட்டுக்கு உரியவர். எனக்குச் சென்னையில் டிராம் ஷெட் இடத்தை வாங்கித் தந்தவரே நாயுடுதான் என்று பெரியார் பேசினார். சர்.பி.டி. இராஜன் மேல் நாட்டில் இருந்து வர முடியாததால், ஈ.வெ.ராமசாமிப் பெரியார் பயிற்சிப் பள்ளியை, நாடாளுமன்ற உறுப்பினர் ராம கிருஷ்ணன் திறந்து வைத்தார். டி.எம். நாராயணசாமிப் பிள்ளை தலைமையில் தி.சு. அவிநாசிலிங்கஞ் செட்டியார் வாழ்த்திப் பேசினார். சர்.சி.வி. ராமன் விஞ்ஞானக் கண்காட்சியைத் திறந்தார். இந்தியாவிலேயே முதன் முறையாக சங்கராச்சாரியாரின் பணி இதுதான் என்பது, அங்கு குறிப்பிட்டுக் காட்டப்பட்டது; இது பெரியாரின் அறிவுப் பணிக்குக் கிட்டிய பெரு வெற்றியாகும். இந்த நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் “விடுதலை”யில் 20.11.65 அன்று அச்சாகி வெளிவந்தன.

“அந்தோ சுயமரியாதைச் சுடரொளி மறைந்தது” என்று 12.10.65 “விடுதலை” துணைத் தலையங்கம் எழுதி வருந்திட, முந்திய நாள்,