பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

390

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


தமது 59 -ஆம் வயதில், 17 ஆண்டுகள் “விடுதலை” ஆசிரியராகப் பணியாற்றிய குத்தூசி குருசாமி மறைக்கார் ஐயனாவரம் இடுகாட்டில் நடந்த அனுதாபக் கூட்டத்திற்குத் தி.பொ. வேதாசலம் தலைமை தாங்கினார். தொண்டு வீராசாமி, கி.வீரமணி, எம்.கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., ஈ.வெ.கி. சம்பத், நடிகர் டி.கே. சண்முகம், அறிஞர் சி.என். அண்ணாதுரை எம்.பி. ஆகியோர் இரங்கலுரையாற்றினர். அருப்புக் கோட்டை எஸ்.என், கருப்பையா விடுத்த ஒரு வேண்டுகோளில், பெரியார் தமது வேனிலிருந்தவாறே பிரச்சாரம் செய்ய நாம் வசதி செய்து தரவேண்டும் என்றார். (பின்னாளில் அவ்வாறே செய்யப்பட்டது)

சென்னை பெரியார் திடலில் அமைந்த “விடுதலை” பணிமனையின் புதிய கட்டடத்தைப் பெரியார் தலைமையில் குன்றக்குடி அடிகளார், 31.10.65 ஞாயிறு அன்று மாலை 5.30 மணிக்கு திறந்து வைத்துத் “தமிழர் இல்லம் என, ஒரு வீட்டை அறிவிக்கும் பலகை போல, எல்லா வீடுகளிலும் “விடுதலை” ஏடு வரவழைக்கப் பட வேண்டும்" என்று அறிவுரை இயம்பினார். “பத்திரிகைத் தொழில் பெரிதும் அயோக்கியர்களிடம் சரணடைந்துவிட்டது. அப்பத்திரிகைகளுக்கு அடிமையாகிறவன் கோழை; அப்பேர்ப்பட்ட பத்திரிகைகளை வெறுத்து ஒதுக்குகிறவனே வீரனென்று பெரியார் எழுதினார்.

காஷ்மீர் பாக்கிஸ்தானுக்கா இந்தியாவுக்கா என அங்கே வாக்கெடுப்பு நடத்த வேண்டும், என்ற கருத்தினை ராஜாஜி தெரிவிக்கையில், தமிழ் நாட்டுக்குப் பார்ப்பான் வேண்டுமா வேண்டாமா என்று ஒட்டெடுக்கத் தயாரா என “விடுதலை“ வினா எழுப்பியது. திங்கட்கிழமை ஒரு வேளை பட்டினி இருந்து, மிச்சப்படுத்திப், போர் நிதிக்குத் தாருங்கள் என்று பிரதமர் சாஸ்திரி வேண்டுகோள் விடுத்தார். அத்துடன், தங்கம் நிறையத் தேவை என்றும் தெரிவித்திருந்தார். அவர் தமிழகத்துக்கு வருகை தந்தபோது, 1,11,11,111 ரூபாய் யுத்த நிதி தரப்பட்டது. சினிமா நடிகர்கள் நிறையத் தங்க நகைகளைத் தந்தார்கள். சிவாஜிகணேசன் அவ்வாறு தந்தபோது, “நன்கொடையா? கடன் பத்திரமா?” என்று பிரதமர் கேட்க, நன்கொடை தான் என இவர் பதில் சொல்ல, அவர் மகிழ்ந்து போனார் “விடுதலை” போர்ச் செய்திகட்கும், மத்திய அமைச்சர்களின் பேச்சுகளுக்கும், முக்கியத்துவம் தந்தது. போரைப் பற்றிப் பெரியார் அக்டோபர் 29ல் கும்பகோணத்தில், மாவட்டத் தலைவர் தோலி ஆர்.சுப்பிரமணி தலைமையில் பேசினார். நவம்பர் 1-ம் நாள் மயிலாப்பூரில், டி.எம். சண்முகம் தலைமையில் பெரியாருடன் வீரமணியம் டி.வி. தெட்சணா மூர்த்தியும் பேசினார்கள், பெரியார், 4 வேலாயுதம்பாளையம், 5 ஈரோடு, 8 சிதம்பரம், 14 சேலம், 15 முதல் 19 வரை சென்னை , 21, 22, பெங்களூர், 23 காஞ்சிபுரம் என்று சுற்றுப்-