பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

391


பயணம் சென்ற போதும், போர் நிலவரங்குறித்துப் பேசி வந்தார். சேலம் கல்லூரிச் சரித்திரப் பேராசிரியர் தி.வை. சொக்கப்பா, சிறந்த பகுத்தறிவாளர். அன்னார் ஓய்வு பெற்றதை முன்னிட்டுச் சேலம் அன்பர்கள் பெரியார் வாயிலாக 2,000 ரூபாய் பொற்கிழி வழங்கினர். பெரியார் தாமும் ரூபாய் 100-ம், அடிகளார் ரூ.101ம், அன்பளிப்பாகத் தந்தனர். கல்வி அதிகாரி சு. செல்லப்பன் பாராட்டுரை நல்கினார்.

“உத்தியோக மண்டலத்தில் தமிழர்கள் கதி” என்று தலைப்பிட்டு, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பட்டியலை வெளியிட்டு, எவ்வளவு பார்ப்பனர் உயர் மட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர் எனப், பெரியார் “விடுதலை”யில் தலையங்கமே தீட்டினார். 27.4.65 முதல் 3.12.65 வரை உடல் நலிவுற்றுச் சென்னைப் பொது மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை பெற்ற பின்னர், 4.12.65 முதல், பிரயாணம் தொடர்ந்தார். கும்பகோணம் இயக்கப் பெரியவர் கே.கே. நீலமேகம், டிசம்பர் 17ம் நாள் மறைந்தார். “விடுதலை” அலுவலகம், 15ம் நாள் முதல் ரண்டால்ஸ் ரோடுக்கு மாற்றப்பட்டுவிட்டது. ராதா மன்றத்தில், அரசுத்துறை சார்பில் நடந்த, காய்கறிகள் கோழிகள் காட்சி ஒன்றைச், சக்கர நாற்காலியில் அமர்ந்த வண்ணமே, பெரியார் சுற்றிப் பார்த்துக், கோழி வளர்ப்பதால் நல்ல லாபம் கிடைக்கிறது. மேலும் அது நல்ல சத்துணவைத் தருகிறது. அதாவது கோழி முட்டை தவிரக் கோழியும் நல்ல உணவாகுமே" என்றார். (சம்பத் இதைக் கேட்டுத்தான் கோழிப்பண்ணை வைத்தாரோ, என்னவோ?)

கம்யூனிஸ்டுத் தீவிரவாதிகளான இடதுசாரிகளில், பாதுகாப்புக் கைதிகளாக இருந்த சிலரை, வெளியே விடுவதற்கு இணங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள், காவல் கைதிகளுக்குச் சந்தர்ப்பம் கொடுப்பது விரும்பத் தக்கதாகும் என்று கூறியதைப் பெரியார் வன்மையாகக் கண்டித்து, ஜட்ஜுகளுக்குச் சிந்திக்க சக்தி வேண்டும் என்றார். திருச்சியில் ஒரு நீதிமன்றத்தில், பாமரர் ஒருவரைக் கூண்டிலேற்ற நேர்ந்த போது, எம்.எஸ். வெங்கட்ராமய்யர் என்ற வக்கீல் பார்ப்பனர் “நீதிமன்றம் இப்போது ஒரு காமராஜைப் பார்க்கப் போகிறது (The honourable court will see one Kamaraj now)” என்று பகிரங்கமாகக் கேலி செய்தார். முத்துக்குமாரசாமி என்ற தமிழ் வழக்கறிஞர், “ஏன் ஓர் அகில இந்தியத் தலைவரைக் கிண்டல் செய்கிறீர்கள்?” என்று கேட்டார். சிவசுப்ரமணிய அய்யர் என்ற இன்னொரு பார்ப்பன வக்கீல் “அதில் என்ன தப்பு?” என்று கேட்டார். பார்ப்பனரின் மனப்போக்கை வெளிப்படுத்த, இதைக் கண்டித்துப் பேசப் போவதாக விளம்பரப்படுத்தியே, பெரியார், டிசம்பர் 18-ல், திருச்சியில், ஒரு பொதுக்கூட்டமே நடத்திக் கண்டித்தார். சங்கராச்சாரியார், திருமணங்களைச் சிக்கனமாக 500 ரூபாய் செலவில் முடிக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். “நல்ல யோசனைதான். நாட்டில்