பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

392

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


லஞ்சம் குறையும், பார்ப்பனர்கள்தான் லஞ்சம் வாங்கும் பழக்கத்தை ஏற்படுத்தியவர்கள். லஞ்சப் பணத்தில்தான் ஆடம்பரமாகப் பெண்களின் திருமணம் நடத்துவார்கள். இதில் சங்கராச்சாரியார் சொல்வதை எவன் கேட்பான்?” என்று எழுதினார் பெரியார்.

யுத்த நிலைமை தொடர்வதால் 1967 பொதுத் தேர்தலைத் தள்ளி வைக்கலாம் என்ற கருத்துக் கூறப்பட்டது. உடனே பெரியார் “எதிரிகள் வெள்ளைக்கொடி பறக்க விட்டுவிட்டார்கள். சுதந்திரா, கண்ணீர்த்துளி, தமிழ் அரசு ஆகிய கட்சிகள் 1967-ல் தேர்தல் வேண்டாம் என்கிறார்களாம். இவர்கள் தேர்தலில் நிற்பார்கள். நல்லவண்ணம் தோற்பார்கள். ஏன் தோற்றீர்கள்? என்றால், பாதுகாப்புச் சட்டம் பாய்ந்து விட்டது என்பார்கள். இவர்கள் பேச்சுக்குச் செவி சாய்க்க வேண்டாம்” என்று எழுதினார். சேலத்தில் ராஜாஜியின் 88வது பிறந்த நாள் விழாவில் 31.12.55 அன்று கலைஞர் மு.கருணாநிதி, மதுரை முத்து. கே. ராஜாராம் எம்.பி., சென்னை மேயர் மைனர் மோசஸ் ஆகியோர் பங்கேற்றதை, “விடுதலை“ எள்ளி நகைத்தது! டெல்லியில் டி.டி.கே. ராஜினாமாச் செய்யவும், சுசீந்திரசவுத்ரி என்ற வங்காளி நிதியமைச்சராகவும், சி.எம். பூனாச்சா என்ற கன்னடியர் ராஜாங்க அமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர். கவர்னர்கள் தங்களுக்கு ஏதோ குறைகள் இருப்பது போல விண்ணப்பித்ததைத் கண்டித்து, ”இவர்களும் அரசாங்க சிப்பந்திகள்தானே? தனிச்சலுகை எதற்கு? பார்க்கப்போனால் இந்தப் பதவியே வீண்பளுகானே?“ என்று கவர்னர்கள் முறையீடு கேலிக் கூத்தே என்னுந் தலையங்கம், “விடுதலை”யில் 31.12.65 அன்று பெரியார் எழுதியிருந்தார். அடுத்து, கவர்னர் லீவின் தொல்லை என்று ஒரு கருத்தும் தெரிவித்தார். அதாவது கவர்னர்கள் அடிக்கடி லீவில் செல்வதால், பிரதம நீதிபதி ஆக்டிங் கவர்னராகி விடவே, நீதிமன்ற வேலைகள் பாதிக்கப்படுகின்றன. மேலும், அப்போது தமிழ்நாட்டைப் பொறுத்துப், பெரியார் விரும்பாத சிக்கல் ஒன்று! மைசூர் மகாராஜா தமிழக கவர்னர், இவர் அடிக்கடி லீவில் செல்லவே, பிரதம நீதிபதி சந்திராரெட்டி கவர்னராகத் தற்காலிக அலுவல் பார்க்க; சீனியர் நீதிபதியாகிய மா.அனந்த நாராயணன் ஐ.சி.எஸ். பிரதம நீதிபதியாக விளங்கிய சிக்கல்தான் அது! தேவையில்லாமல், சட்டம் பயிலாத ஒரு பார்ப்பனர், உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக வந்ததைப் பெரியார் பலமுறை பகிரங்கமாகக் கண்டித்து எழுதினார், பேசினார்; இதற்காகப் பக்தவத்சலம் ஆட்சியைக் குறை கூறினார்!

தொழிலாளர் என்கிற இனத்தையே ஒழித்துவிட்டு, முதலாளி கண்ட்ராக்டர் பங்காளி என்கிற முப்பிரிவினர் தாம் தொழிற்சாலைகளை நடத்த வேண்டும். அப்போது தான் தொழிலாளர் வேலை நிறுத்தம் போன்ற தொல்லைகளும், இதற்கேற்பத் தொழிலாளர்