பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

396

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்



தமிழனது பழம் பெருமை என்பது காட்டுமிராண்டித்தனமேயாகும். கம்பனும், இளங்கோவனும் காட்டுமிராண்டிகளே ஆவார்கள். புளுகு இலக்கியத்துக்குப் பரிசு தருவதானால் இவர்களுக்கு தரலாம். அறிவுப் பிரச்சாரம் செய்வதற்கு எங்களைத் தவிர இந்த நாட்டில் வேறு நாதி ஏது?. என்று சாடுவதற்கு ஒரு தலையங்கம், ஜோசியம் சொல்லுகிறவனுக்கு அடிப்படையானவை பித்தலாட்டம், மோசடி, ஆகியவை: ஜோசியம் கேட்பவனுக்கு அடிப்படை முட்டாள்தனம், பேராசை ஆகியவை - எனப் படம் பிடித்துக் காட்டுவதற்கு ஒரு கட்டுரை, டி.டி.கிருஷ்ணமாச்சாரி மீது தனிப்பட்ட முறையில் நமக்கு விரோதமில்லை. ஆனால் பொது வாழ்க்கையில் உள்ளவர் ஒழுக்கமாயிருக்க வேண்டுமல்லவா? அதற்காகக் கட்டாயம் அவர்மீது விசாரணை நடத்தியே தீரவேண்டும் - என வலியுறுத்தி ஓர் தலையங்கம், காங்கிரஸ் மாநாடு ஜெய்ப்பூரில் கூடிக் கலைந்துவிட்டது; இனிக் காங்கிரசின் அடுத்த வேலைத் திட்டம் என்ன? காமராசர் கவனம் செலுத்தியாக வேண்டும். காமராசரின் சமதர்மத் திட்டங்களை இன்னும் நல்ல முறையில் பிரச்சாரம் செய்யப் பத்திரிகைகள் வேண்டும். புதிதாகவும் துவங்க வேண்டும். ஆரம்பத்தில் நட்டம் வரும். அதற்காகப் பின் வாங்கக் கூடாது. என்னுடைய யோசனை ஏற்றுக் கொள்ளப்பட்டுப் பத்திரிகை நடத்தி நட்டமானால் ஒரு ஜில்லாவின் பொறுப்பை நானே ஏற்றுக் கொண்டு ஈடு செய்யத் தயார் என்று அறைகூவல் பாணியில் ஓர் தலையங்கம்.

பிப்ரவரி முதல் வாரம் “கரண்ட்” இதழ், தென்னாட்டின் தலைவர் காமராஜ் அல்ல; அண்ணாதுரைதான் என்று புகழ்ந்து எழுதிவிட்டது! மதுரைப் பல்கலைக்கழகம் துவக்கப்பட்டுப் பன்மொழிப் புலவர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் முதலாவது துணைவேந்தரானார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத் துணைவேந்தராக சி.பி. ராமசாமி அய்யருக்குப் பிறகு யார் என்பது வினாக்குறியாகவே விளங்கியது. பெரியாருடைய சுயமரியாதைத் திருமண விளக்கவுரை கிராமபோன் தட்டாக வெளிவந்து, ஒரு செட் விலை எட்டு ரூபாய் எனக் கழகத்தின் மூலம் விற்பனை ஆகிவந்தது. 24.2.66 அன்று, என்.எஸ். சம்பந்தம் அவர்களின் மாமனாரான மத்தூர் ராஜாகிருஷ்ணன் அவர்கள் மறைவுக்குப் பெரியாரும் மணியம்மையாரும் சென்று துக்கம் விசாரித்தனர். 7.3.66 அன்று, சென்னையில் திரைப்பட அதிபர் ஜி.என். வேலுமணியின் மகன் சரவணனுக்கும் சாந்திக்கும் திருமணம், பெரியாரும் காமராசரும் கலந்து கொள்ள ஏற்பாடு. தவிர்க்க இயலாத காரணங்களால் காமராசர் இருக்க இயலவில்லை. வரவேற்றுப் பேசிய எம்.ஜி.ஆர், கலையுலக ரத்தினங்களில் ஒருவர் - என்றார் பெரியார். யாராவது ஒருவர் ஒரு உதவி நமக்குச் செய்தால் நன்றி என்று சொல்லலாம். பெரியாரைப்போல் நமக்காகவே வாழ்கின்றவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றி, அவர்கள் சொல்வதுபோல் நடந்து