பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

40


சம்பத், செல்வராஜ், செல்வா, கஜராஜ் ஆகிய மூன்று ஆண், இரண்டு பெண்மக்கள் பிறந்தனர். திருப்பத்தூர் வழக்கறிஞர் சாமிநாயுடு மகன் கஜேந்திரன் மிராண்டாவையும், மகள் சுலோச்சனா சம்பத்தையும் மணந்துகொண்டனர். இவர்கள் அனைவர்க்கும் மக்கட்செல்வம் நிரம்ப உள்ளது.

இப்போது ஈ.வெ. கிருஷ்ணசாமி, ரங்கநாயகி அம்மாள், ஈ.வெ.கி. சம்பத், ஈ.வெ.கி. கஜராஜ் ஆகியோர் உயிருடன் இல்லை. ஈ.வெ.கி. செல்வராஜ் நகரமன்றத் துணைத் தலைவராயிருந்தார்.

மூத்த பிள்ளைக்கு முற்றிலும் மாறுபட்ட குணநலன்கள் விளங்கினார். கொண்டவராய் இளையபிள்ளை இராமசாமி இளமையிலேயே இவருக்குப் பெற்றோரின் கண்டிப்பும் கட்டுப்பாடும் நேரடியாய்க் கிட்டாமல் போயிற்று. காரணம், இவர் தனக்குப் பாட்டி முறையுள்ள ஒருவரிடம் செல்லப் பிள்ளையாக இளம்பருவத்தில் வளர்ந்து வந்தார்.

இராமசாமி பயில்வதற்காக அனுப்பப் பெற்றது ஒரு திண்ணைப் பள்ளிக்கூடம். அது சாமான்யக் குடிமக்கள் - அதாவது - செக்கில் எண்ணெய் ஆட்டுவோர், கூடை முறம் முடைவோர், பீடி சுற்றுவோர் போன்ற அடித்தளத்தார் - அதிலும் பல்வேறு சாதிமத அடிப்படையில் அழுத்திவைக்கப்பட்டோர் - வாழும் இடத்தில் அமைந்திருந்தது. ஆறாவது வயதில் அங்கு நுழைந்த இராமசாமி, மூன்றாண்டுகள் அந்தத் திண்ணைப்பள்ளியில் இருந்தார்; பயின்றார் என்று சொல்ல முடியாது; குறும்புகள் புரிந்தார்; வரம்புகள் கடந்து சமுதாய சமத்துவ நெறி நின்றார்! ஆம்!

பரம பாகவதரும் உத்தம வைணவ பக்த சிரோமணியுமான வெங்கட்ட நாயக்கரின் இளைய பிள்ளை, பள்ளியில் பல திருவிளையாடல்கள் நிகழ்த்தினார். இவர் குடிப்பதற்குத் தண்ணீர் வேண்டுமானால்கூட, உயர் வகுப்பினரான உபாத்தியாயர் வீட்டில் மட்டுமே அருந்திடவேண்டும் என்பது பெற்றோர் உத்தரவு! இதை அன்றாடம் பள்ளிக்குப் புறப்படும்போதெல்லாம், பிள்ளைக்கு நினைவூட்டுவது அன்னையாரின் வாடிக்கை. அதனால் அந்த ஆணையைக் கடைப்பிடிக்க கருதிய மகனார், பள்ளி ஆசிரியராகிய சைவ ஓதுவார் வகுப்பைச் சார்ந்தவருடைய வீட்டில் தண்ணீர் அருந்தச் செல்வார். இவரை எச்சில் படாமல் குவளையைத் தூக்கிக் குடிக்கச் சொல்வார்கள். தண்ணீர் அருந்திய பாத்திரத்தைக், கீழே கவிழ்த்து வைக்கச் சொல்லித், தண்ணீர் தெளித்துப், புனிதப்படுத்தி, உள்ளே எடுத்துச் கொள்வார்கள். சிலநேரங்களில் இவருக்குத் தண்ணீர் தரவும் தயங்குவார்கள்!