பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

417


இனி மகன் தந்தைக்காற்றும் உதவிதான் பாக்கி பதவியைப் பெரிதாக மதிக்காமல் உடனே நாமே சென்று அவரைப் பார்க்க வேண்டுமென்று போளார்களே இந்த நிகழ்ச்சிக்கு ஈடான சரித்திர நிகழ்ச்சி உலக வரலாற்றிலேயே கிடையாதல்லவா?

தம்மைத் தேடி வந்து விட்டவர்களைக் கண்டதும், தமது கண்களையே நம்பாமல், பெரியார் கூச்சம் மேலிட்டுக் கூனிக் குறுகினாலும், தாங்கொணா மகிழ்வுப் பெருங்கடலில் மூழ்கிச், சிக்கித், தத்தளித்துப் போய்விட்டார் அண்ணாவும் முதலில் தந்தையின் உடல் நலம், மணியம்மையாரின் உடல் நலம், ஈரோட்டு வீடு, இப்படி எதை எதையோ விசாரித்து விட்டுப், புறப்படும்போதுதான், “அய்யா! நாங்கள் அவ்வப்போது எப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை எங்களுக்குச் சொல்லி வரவேண்டும்“ என்றார் . பெரியாரும் “அப்படியே ஆகட்டுங்க” என்று சொல்லவேண்டி வந்தது.

அண்ணாவும் அமைச்சர்களும் சென்றார்கள், கண்டார்கள், பெரியாரின் இதயத்தை வென்றார்கள், மீண்டார்கள்! ஆனால் பெரியாருக்குத் தலைவலி ஒன்றை உண்டாக்கி விட்டார்களே? கண்ணை மூடிக்கொண்டு கிணற்றில் விழச்சொன்னாலும் பெரியாரின் ஆணையைச் சிரமேற்கொள்ளும் இலட்சிய வீரர்களின் கூடாரமல்லவா திராவிடர் கழகம்? அதிலுள்ள சிலர் (அணுக்கமான சிலர்) பெரியார் தவறு இழைத்து விட்டார் என்றே கருதினார்கள்; பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளாகப் பின்பற்றி வந்த கோட்பாட்டிலிருந்து பெரியார் விலகி விட்டதாக நம்பினார்கள்! வருத்தத்தோடு சிலரும், கோபத்தோடு பலரும் சடிதம் எழுதினார்கள். பெரியார், அவர்களைச் சமாதானப் படுத்தி, விளக்கமாக ஒரு தலையங்கம் 9.3.67 “விடுதலை" ஏட்டில் எழுதினார்.

“தேர்தல் முடிவுக்குப் பின்னிட்டு நான் தெரிவித்த எனது கருத்தாகிய அறிக்கைகளைப் பற்றி எனது தோழர்களிடையிலும், காங்கிரஸ்காரர்களிடையிலும், பொது மக்களிடையிலும் ஒரு தவறான எண்ணம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

சிலரை நேரில் பார்த்த அளவிலும், சிலரால், எனக்கு எழுதப் பிட்ட கடிதங்களைப் பார்த்த அளவிலும் எதிர்க் கட்சித் தலைவர்கள் என்னைக் கண்டு பேசிய பிறகு, எனது கருத்து மாறிவிட்டதாகவும், எனது எதிர்ப்பு உணர்ச்சியை நான் கைவிட்டு விட்டதாகவும், எதிரிகளுக்கு ஆதரவாகப் போவதாகவும். இதனால் எதிர்காலம் மிகவும் மோசமாய்ப் போய் விடுமென்றும், தாம் ஆதரிக்க ஆரம்பித்து விட்டால் எதிரிகள் தலைகால் தெரியாமல் ஆடுவார்கள் என்றும், இதனால் சாதாரண மக்களும், தம் கழகத் தோழர்களும் பழி வாங்கப்படுவார்கள் என்றும், என்னை நம்பியவர்களை நான் காட்டிக் கொடுத்து விட்டதாக ஆகுமென்றும், முடிவாக நானும் எதிரிகளைக்