பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

428

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்



6.4.67 அன்று “பொற் காலம்” என்ற தலைப்பில் அலசி ஆய்ந்து, கழகத் தோழர்களுக்கு அறிவுரை புகன்றார். “சமதர்மத் திட்டத்தை அமுல்படுத்துகிறார்கள் என்பதற்காகவே நாம் இதுவரை காங்கிரசுக்கு ஆதரவு தந்தோம். ஆனால் எதனாலோ காங்கிரஸ் தோற்றுவிட்டது. தமிழ் நாட்டில் மாத்திரம் அல்லாமல் இந்தியா எங்கும் பரவலாகத் தோற்றுப் போனது. ஒவ்வொரு மாகாணத்துக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கலாம். பொதுவான காரணம் சொல்ல வேண்டுமானால், சோஷலிச எதிரிகளின் சூழ்ச்சி, சதி என்று சொல்லலாம். மேலும் வாக்காளர்களின் பலவீனமான பல பழக்க வழக்கங்கள் (Voters' Weaken mind) தேர்தலில் முடிவுகள் (Heart Failure) மாரடைப்பு போலத் திடீரென்று மாறிவிட்டன! இங்கே இப்போது புதிய ஆட்சி அமைந்திருக்கிறது. மற்ற விஷயங்களில் இந்த ஆட்சி நமக்குப் பயன்படுகிறதோ இல்லையோ, நிச்சயமாய் நமது பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கு எதிப்பாக இருக்காது என்பதை நம்பலாம். நமது லட்சியம் என்ன? சுயமரியாதை, பகுத்தறிவுக் கொள்கைகள் பரவ வேண்டும்; கல்வி, பதவி, இவைகளில் மக்கள் தொகை அடிப்படையில் விகிதாச்சார முறையில் உரிமை தரப்படவேண்டும் என்பவைதானே? 9.4.67 அன்று திருச்சியில் எல்லாரும் கூடுவோம்; திட்டம் தீட்டுவோம் தோழர்கள் பலர் கடுஞ்சொல்லால் என்னைக் கடிந்து கொண்டார்கள். நோய் முற்றிப் போன ஒரு நோயாளிக்கு, ரணசிகிச்சை செய்யாவிட்டால் நிச்சயம் உயிர் போய்விடும்; ரணசிகிச்சை செய்தால், 70% பிழைக்கலாம் என்ற நிலை இருந்தால், ரணசிகிச்சை செய்து பார்த்து விடுவதுதானே நல்லது? அது போல், இந்த ஆட்சியை அணைத்துப் போக முயல்வோம்; முடியாவிட்டால் அது நமக்கு ஏமாற்றமல்ல” . என்றார் பெரியார்!

அடுத்த படியாகப் பெரியார் கல்வி அமைச்சரைப் பாராட்ட ஒரு நல்ல வாய்ப்புக் கிடைத்தது! 16.4.67 அன்று கோட்டையின் முகப்பில் தமிழக அரசு தலைமைச் செயலகம் என்று தமிழில் அமைந்த நியான் சைன் போர்டை முதலமைச்சர் திறந்து வைத்ததும்; ஸ்ரீ, ஸ்ரீமதி, குமாரி என்ற வடமொழிச் சொற்களுக்குப் பதிலாகத் திரு.திருமதி, செல்வி. என்ற மரியாதை அடைமொழிகள் வழங்கப்படும் என அறிவித்ததும்; (26.4.67 அன்று ஆணை பிறப்பிக்கப்பட்டது). பெரியாருக்கு மகிழ்வைத் தந்தன. அத்துடன், அறநிலையத்துறையும் அவர் (நெடுஞ்செழியன்) பொறுப்பிலிருந்ததால், சிதம்பரம் நடராசர் கோயிலுக்கு அலுவலாகச் சென்றபோது, வழங்கப்பட்ட திருநீற்றைக் கீழே கொட்டியது, தன்னை நாத்திகன் என்று காட்டிக் கொள்ளவே, எனப் பெரியார் கருதினார். அதனால், “பலே நெடுஞ்செழியன் பலே பலே நெடுஞ்செழியன்“ என்று தலைப்பிட்டு, ஒரு பெட்டிச் செய்தி வெளியிட்டார். “விடுதலை”யில் “தமிழ்ப் புத்தாண்டை“ முன்னிட்டுத் ”தமிழ் மகனுக்கு ஒரு வேண்டுகோள்" என்ற தலைப்பில் - இந்து மதம்,