பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

442

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


எழுதுகையில் - காங்கிரஸ் - (மைனஸ்) காமராசர் =0 (ஜீரோ) தானே? நான் இன்னமும் காமராஜர் தலைமையில் உள்ள காங்கிரஸ், சிறு மாறுதல்களுடன் நாட்டை ஆளவேண்டுமென்று ஆசைப்படுகிறவன்; ஆனால் அடுத்த தேர்தல் என்ன ஆகுமோ என்று பயமாயிருக்கிறது - என்று பெரியார் குறிப்பிட்டார்.

பம்பாயில் சிவசேனைக்காரர்களின் அட்டகாசம் உச்ச கட்டத்திலிருந்து, தமிழர்கள் பயங்கரமாகத் தாக்கப்பட்டனர். அரசு எந்தப் பாதுகாப்பும் தர இயலவில்லை . பெரியார் இந்தப் பிரச்சினையைத் தமது சொந்தப் பிரச்சினையாகப் பாவித்தார். “தமிழனுக்கு மானம் வேண்டாமா? பம்பாயில் சிவசேனைக்காரன் தமிழனை அடித்தால் அதற்குப் பரிகாரமாக இங்கிருக்கிற பம்பாய்க்காரனை நாம் விரட்ட வேண்டாமா?. வெறுக்கத் துணிந்தவன்தான் வெற்றி பெறுவான்" என்றெல்லாம் எழுதினார். திருச்சி சென்றவுடனே, சிவசேனை எதிர்ப்பு மாநாடு நடத்திட ஆவன செய்து வந்தார்; தமது பிறந்த நாளுக்கு முதல் நாள் என்று, தேதியும் குறித்தார்!

அமைச்சரவை விஸ்தரிப்பு கிடையாது என்று முதலமைச்சர் வெளியிட்ட செய்தி, “விடுதலை” க்கு கரும்பு சாப்பிட்டபோது போல இனித்தது; 6. 9.67 அன்று அதைப் பிரசுரித்தபோது, 8ந் தேதி வெளியான மலர்மணம் என்ற விளம்பரத்தில் தான், முதல் தடவையாக ( பிணைந்த பின்னர்) அறிஞர் சி.என். அண்ணாதுரை தரும் “அந்த வசந்தம் “ எனக் காணப்பட்டது. 16.9.67 ”விடுதலை" முதல் பக்கத்தில், 59 வயதடைந்த தமிழக முதலமைச்சர் மாண்புமிகு சி.என். அண்ணாதுரை வாழ்க, எனப் பெரிய எழுத்துக்கள் மின்னின 20 ந் தேதி ஒரு செய்தி:- மத்திய அமைச்சர் டாக்டர் வி.கே.ஆர்.வி. ராவ் காஞ்சியில் பிறந்தவர்தான். அவர் காஞ்சி சென்ற போது, முதல்வர் அண்ணாவை வரதராஜப் பெருமாள் கோவிலுக்குத் தன்னுடன் அழைத்தாராம். அண்ணா வீட்டெதிரே உள்ள இந்தக் கோயிலுக்குக் கூடத் தாம் என்றும் போனதில்லை என்று கூறி, மறுத்துவிட்டாராம். இதை மத்திய அமைச்சரே வெளியிட்டுப் பாராட்டி இருந்தார் அண்ணாவை!

“விடுதலை” தலையங்கம் பெரியார் எழுதினார். பொங்கும் மகிழ்ச்சிப் பெருக்கில் திளைத்தார். தி.மு.க அரசும், மந்திரிகளும், அதிகாரிகளும் தம்மிடம் மிகுந்த கனிவும் மரியாதையும் நன்றியும் அன்பும் செலுத்துகிறார்களாம். ஒரேயடியாகப் புகழ்ந்தார். அதில் உண்மையில்லாமல் இல்லை! திருச்சி தேவர் மன்றத்தில் சிவசேனை எதிர்ப்பு மாநாடு பெரியாரின் சிம்ம கர்ச்சனையில் நிறைந்தது. இனிமேல் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது வணக்கம் கூறாமல் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று கூறச் சொன்னார். "சென்னையில் இதைப்பற்றி விளங்குவோம் அக்டோபர் - 1ல் நாடெங்கும் கண்டனக்