பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/470

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

469


அப்பாலுள்ள டெல்லிக்கு நாம் ஏன் அடிமையாயிருக்க வேண்டும்? நாங்கள் என்ன, போரில் அடிமைப்பட்ட கைதிகளா?” என்று கேட்டார் பெரியார். தமிழகம் எங்கணும் நிறைவேற்றப்பட்ட கண்டனத் தீர்மானங்கள் (ஆங்கில வாசகமும் முன்பே “விடுதலை”யில் தரப்பட்டிருந்தது) டெல்லியில் குடி, அரசுத் தலைவர், உள்துறை அமைச்சர் சென்னை “விடுதலை” அலுவலகம் இங்கெல்லாம் குவிந்தன என்ற செய்தி. “விடுதலை” ஏட்டின் நாலாம் பக்கத்தை, அந்த மாதம் முழுதும் நிறைத்தது! பெரியார் உடல்நிலை சுற்றுப் பயணத்துக்குத் தகுதியற்றதாக இருந்ததால், தோழர்கள் அழைக்காதிருக்க வேண்டுகோள் விடப்பட்டது.

எம்.ஆர். ராதா வழக்கு அப்பீலில் சென்னை உயர்நீதி மன்றத் தீர்ப்பு அவருக்குப் பாதகமாக அமைந்ததால், சுப்ரீம் கோர்ட் செல்லவிருப்பதாகச் செய்தி வெளியானது. 17.11.1951 “கரண்ட்” இதழில் ஆசிரியர் கரகா, ஒரு செய்தி தெரிவித்திருந்தார் இராஜாஜி பற்றி. மைசூர் ஜட்ஜ் மேடப்பாவைக் கொல்ல முயன்ற சதி வழக்கில், சம்பந்தப்பட்டதாக, எஸ். எஸ். ராஜு என்ற பார்ப்பன வக்கீல் தண்டிக்கப்பட்டார். ஆனால் அதே இரவில், காரணமின்றி, விடுவிக்கப் பெற்றார். அப்போது டெல்லியில் உள்துறை மந்திரி இராஜகோபாலாச் சாரிதான் என்று 17 ஆண்டு கழித்து இதை எடுத்துக் கூறி, இராஜாஜியின் “நேர்மை” க்கு விளக்கம் தந்தது “விடுதலை” 17.4.68 அன்று பெரியாரின் வள்ளல் தன்மைக்கு ஓர் எடுத்துக் காட்டு: 1966ம் ஆண்டு, ஈரோடு சிக்கய்யா நாயக்கர் மகாஜனக் கல்லூரியில், பெரியார் 1,000 ரூபாய் நன்கொடை தந்து, நிறுவனர் நாளில், ஆண்டு தோறும் பகத்தறிவுத் துறையில் சிறந்து விளங்கும் ஒரு மாணவனுக்குப் பரிசு தரவேண்டும் என்பதற்காக ஓர் அறக்கட்டளை நிறுவினார்; என்.டி. சுந்தரவடிவேறு அவர்கள் பெயரால்! முன்பு 1951ல் சென்னையிலும் 1961ல் சிதம்பரத்திலும் பெரியாருக்கு அன்பளிப்பாகக் கார் வழங்கினார்கள். இப்போது படுக்கை முதலிய வசதிகளுடன் நகரும் வீடு போல ஒரு வேன் விலைக்கு வந்துள்ளது. சுமார் 20 ஆயிரம் ரூபாய்க்குக் கிடைக்கலாம். தோழர்கள் அன்பளிப்புத் தாருங்கள்! அதை வாங்கிப் பெரியாருக்கு, வழங்குவோம் - என வீரமணி ஒரு வேண்டுகோள் விடுத்தார் 4.5.68 அன்று.

காமராசருக்கு எதிராக விருந்து நடத்தி, எதிர் கோஷ்டி சேர்த்து வந்தனர் சில மாஜி மந்திரிகள்; இது எப்படியோ பெரியாரின் சுவனத்துக்கு வந்துவிட்டது. இவர்கள் இரகசியமாக இராஜாஜியின் சீடர்களாயிருப்பதும் தெரிந்தது. விடுவாரா? பூனைக் குட்டி பையிலிருந்து வெளியே வந்துவிட்டது என அவர்கள் முகமூடியை எடுத்து, அடையாளம் காட்டினார் பெரியார். “விடுதலை” யின் தலையங்கம் 23.4.68, 29.4.68, 2.5.68 எல்லாம் இவர்களுக்கே