பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/472

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

471


கத்திலேயே பெரியார் உரைத்தார். மறுநாள் “காமராஜர் கவனிப்பாரா? என்கிற மகுடமிட்டுப் பெரியார் ”தி.மு.க. ஆட்சிக்கு வந்த இந்தப் பதினைந்து மாதங்களில் எவ்வளவோ கேடுகள் குறைந்திருக்கின்றன. உங்கள் கையிலிருந்த ஆட்சி பார்ப்பானுக்குப் போகாமல் தமிழர் கைக்குத்தானே வந்திருக்கிறது? அப்படியிருக்க, மதுரையில் ஏன் மந்திரிகளுக்குக் கருப்புக் கொடி பிடித்தார்கள்? எந்தக் காங்கிரஸ் கமிட்டி அப்படி முடிவு எடுத்தது? கடும் மழையால் இடி மின்னல் ஏற்படாமல் காமராஜர்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்! உங்கள் தொல்லைகளால்தானே அண்ணா, மதுவிலக்கு நீடிக்கும் என்கிறார்; நாவலர், பாடத்தில் இதிகாசம் இருக்கட்டும் என்கிறார்; கலைஞர், தமிழ் தமிழ் என்கிறார்' என்று எழுதினார்.

தமிழக அமைச்சர் ஏ.கோவிந்தசாமி உடல் நலங்குன்றி, 3.5.68 அன்று பொது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரைப் பெரியாரும், மணியம்மையாரும், 23ந் தேதி மாலை 5 மணிக்குச் சென்று பார்த்து நலம் விசாரித்தனர். அடுத்த 22.6.68 அன்றுதான் அமைச்சர் நலமுற்று வீடு திரும்ப முடிந்தது! இந்திராகாந்தி ஆஸ்திரேலியா சென்றிருந்தார்; அங்கு, உங்கள் நாட்டில் ஏன் மூடநம்பிக்கை அதிகமாயிருக்கிறது என்று கேட்டதற்கு, எங்கள் நாடு மிகப் பெரியதாயிருப்பதுதான் காரணம் என்று கூறியிருந்தார். பெரியாருக்குப் பிரதம மந்திரி ஒரு பிடி கொடுத்துவிட்டாரே! “சுய மரியாதை இயக்க, திராவிடர் கழகத் தோழர்களே! இந்தப் பேச்சை நீங்கள் ஒரு கட்டளையாக ஏற்றுக் கொள்ள வேண்டும்! சிறிய நாடாயிருந்தால், மூடநம்பிக்கைகளை எளிதில் ஒழிக்கலாமென நமது பிரதமரே கூறியிருக்கிறார். அதனால் நாம் தமிழ் நாட்டைப் பிரித்துச் சிறிய நாடாகவே வைத்துக் கொள்ள, நீங்கள் பாடுபட வேண்டும்" என்றார் பெரியார். சென்னை எழும்பூரிலுள்ள மகா போதி சங்கக் கட்டடத்தில் அநாதைச் சிறார்கள் நிலையத்தை, 26.5.68 அன்று, பெரியார் திறந்து வைத்து, அறிவும் சிந்தனையுமே புத்தரின் கொள்கைகளாகும் எனச் சுருக்கிக் கூறினார்!

அமைச்சர் கலைஞர் கருணாநிதிக்குச் சிலை அமைக்க முடிவு செய்து, சிலையும் தயாராகி, இடமும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், யாரோ எதிர்ப்புத் தெரிவித்ததற்காக, அவரே தனக்கு வைக்கக்கூடாதெனத் தடுத்துவிட்ட செய்தி பெரியாருக்கு எட்டி விட்டது. “கருணாநிதிக்குச் சிலை வைத்தே ஆகவேண்டும்“ என்கிற தலைப்பில் 28, 29 இரு நாட்களும், சூடான தலையங்கம் தோன்றியது. ”கலைஞர் அறிவில் சிறந்தவர். நீர்வாகத்தில் சிறந்தவர், பார்ப்பன ஆதிக்க ஆட்சியைத் தமிழர்க்கு ஆக்கித் தந்தவர். எனவே, தயாரான கலைஞரின் சிலையை, ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில், நிலை நிறுத்தியே ஆகவேண்டும். அறிஞர் அண்ணா அவர்கள், இடையூறுக்கு