பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/473

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

472

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


இடந்தராமல், தமிழர் மானத்தைக் காப்பாற்ற வேண்டும். இதில் கலைஞரும், தனது அபிப்பிராயத்தை வெளியிட, அவருக்கே உரிமை கிடையாது! யாருக்காவது சங்கடம் இருக்குமானால், இந்தச் சிலை அமைக்கும் பொறுப்பை நானே ஏற்றுக் கொண்டு எப்படியும் நிறைவேற்றியே தீருவேன்“ என்று பெரியார் விடுத்த சவால், எப்படியும் அவருக்குப் பிற்காலம் மணயம்மையாரால் சிறப்புடன் பூர்த்தி செய்யப்பட்டது உயரியதோர் வரலாறாகும். இதையொட்டி அடுத்த மாதம் 2ந் தேதி குடந்தையில் “காங்கிரஸ்காரனே! நீ ஒரு கலைஞர் சிலையை உடைத்தால், நாங்கள் உங்களுடைய 2, . சிலைகளை உடைக்க மாட்டோமா?” என்றும் பேசியிருக்கிறார் பெரியார். 8.6.68 “பிளிட்ஸ்" இதழ் கடைசிப் பக்கத்தில் கே.ஏ.அப்பாஸ், பெரியாரை அபாரமாகப் புகழ்ந்து, கடவுளை மறுக்கும் மாமேதையென அளவிலாப் பாராட்டு நல்கியிருந்தார்.

பெரியாருக்கு “நகரும் குடில்“ வழங்கும் முயற்சியில் ஈடுபட்ட வீரமணி, 14.6.68 வரை ரூ. 10,115-50 சேர்ந்துள்ளதாகவும், இன்னும் ஒரு மாதத்துக்குள் மீதத் தொகையும் கிடைத்து விட்டால், ஆகஸ்ட் திங்களில் கரூர் வட்ட திராவிடர் கழகத்தினர் கோரியுள்ளவாறு, அங்கே விழா நடத்தி அளித்திடலாம் எனவும் அறிவித்திருந்தார். இராஜாஜியை அடிக்கடி சி.சுப்பரமணியம் சந்திக்கிறார். இது எதற்கோ என வினா எழுப்பியது ”விடுதலை" தென்காசி இடைத் தேர்தல் 3.7.68 அன்று நடைபெறுவதாக இருந்தது. பெரியார் ஜூன், ஜூலை மாதங்களில் பெருமளவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போதிலும், தேர்தல் பிரச்சாரத்துக்காக அந்தப் பகுதிக்குச் செல்லவில்லை !

“காமராஜர் காலத்தில் எஸ். எஸ். எல். சி. யில் பரிட்சைத் தேர்வு பெற்றவர்கள் 50 சதவீதம். இப்போது அது 2 சதவீதம்தான் அதிகரித்துள்ளது. இது எப்போது 75 சதவீதம் ஆவது? ஏழைப் பிள்ளைகள் எப்போது கடைத்தேறுவது? இந்த ஆட்சியிலும் இதுதான் கதி என்றால், யாரைக் கொண்டு, எங்கே போய், எப்போது தெற்குப் பரிகாரம் காண்பது?” என்று கவலை தெரிவித்தார் பெரியார். “இவ்வளவு நாள் கழித்துக் காமராஜர், தி.மு.க. பணம் கொடுத்து ஓட்டு வாங்கியதாகக் கூறலாமா?“ இது இன்றைய ஆட்சியைக் கவிழ்க்க நினைப்போரின் சூழ்ச்சியான கருத்தல்லவா? எந்த விதத்திலும் காங்கிரஸ் ஆட்சியை விட இன்றைய தி.மு.க. ஆட்சி மேலானதுதான் என்பது என்னுடைய 50 ஆண்டு அனுபவம் சொல்வதாகும்” என்று திருச்சியில் 10.6.68 அன்று பேசினார் பெரியார். 13-ந் தேதி சென்னை வெள்ளாள தேனாம்பேட்டையில், கலைஞர் பிறந்த நாளில் பேசும்போது, “மந்திரி பதவியை விட்டு விட்டுக் கட்சி வேலைக்குப் போகிறேன் என்கிறார் கலைஞர், இவரைத் தவிர வேறு யாரும் இப்படிச் சொல்வார்களா? நல்ல பின்பற்றக் கூடிய தொண்டுள்ளம்