பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/474

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

473


படைத்த கொள்கை வீரர் கலைஞர்“ என்று புகழ்ந்தார். புதுச் சேரியில் ஒரு பொதுக் கூட்டத்தில் “ரிஷிகளும், மகாத்மாக்களும் நாட்டு மக்களிடையே முட்டாள் தனத்தை வளர்த்தார்கள். மடமையை வளர்க்கும் பத்திரிகைகளும், புலவர்களும் மேலும் தூண்டினார்கள். கடவுளை ஒழித்தால் மட்டுமே நாம் பேதமற்ற சமுதாயம் காண முடியும். கடவுள் என்கிறார்களே, அது என்ன ஒரு பொருளா? அது இயற்கைப் பொருளா? செயற்கைப் பொருளா? எந்த மருந்தானாலும் அதற்கு ஒரு formula இருப்பது போல, எந்தப் பொருளுக்கும் ஒரு formula இருக்க வேண்டுமே? கடவுளின் கூட்டு முறை, அல்லது செய்முறை formula என்ன? யாராவது சொல்ல முடியுமா?” என்று உலக மேதைகளின் சிந்தனைக்கும், கேள்விக்குறி ஒன்றை எழுப்பினார் பெரியார்.

“சென்னை வானொலியில் பூணூல் மயம்” என்று ”விடுதலை“ 27.6.68 அன்று, பட்டியலிட்டுக் காட்டியது. தென்காசி இடைத்தேர்தல் பற்றி, ”இந்து“ பத்திரிகையின் கருத்தைக் கண்டித்து, ”மவுண்ட்ரோடு மகாவிஷ்ணுவின் சாதிப்புத்தி“ என 1.7.68 தலையங்கம் வந்திருந்தது. 4ந் தேதி தென்காசியில் தி.மு.க. 15,000 வாக்குகள் முன்னணி என்ற செய்தி-5ந் தேதி கதிரவன் எம்.எல்.ஏ. ஆனார்; வாக்கு வித்தியாசம் 23,256- இதைக் கேட்டு டெல்லியே திகைக்கிறது என ‘மெயில்’ கூற்று. விழுப்புரம் அரசினர் கல்லூரித் திறப்பு விழாவில், கல்வியில் அனைவருக்கும் சம வாய்ப்பு வேண்டும் என்று அண்ணா கருத்துரைத்தார். மாயூரம் வட்டம் மணல் மேடு கிராமத்தில் கிட்டப்பா எம்.எல்.ஏ. முயற்சியால் 12, 13 தேதிகளில் சமுதாய சீர்திருத்த-விவசாய மாநாடுகள் நடைபெறவிருப்பதைப் பாராட்டி ”விடுதலை“ துணைத் தலையங்கம் தீட்டியது. 13ந் தேதி முதல் அச்சு, தட்டச்சு முறைகளில் எளிதாக இருக்கும் பொருட்டு, எழுத்துச் சீர் திருத்தம் (தமிழில் அல்ல) கேரளாவில் அமுலுக்கு வருமென அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த ஆண்டும் காமராசரின் 66வது பிறந்த நாள் வாழ்த்து 15.7.68 அன்று “விடுதலை” யில் வெளிவந்திருந்தது. வழக்கம் போலல்லாமல், சிறிய அளவில்

காங்கிரஸ் தலைவர்களாக சி.சுப்ரமணியம், நிஜலிங்கப்பா ஆகியோர், இராமாயணம், பாரதம் ஆகிய பகுத்தறிவுக்குப் புறம்பான கதைகளை அரசியல் பிரச்சாரத்துடன் இணைத்துப் பேச, இவர்கள் பார்ப்பனரல்லாதாராயிருந்தும், எப்படி மனம் வருகிறது - என்று பெரியார் கண்டித்தார். 13.7.68 அன்று “விடுதலை” பெரியாரின் வேகமான தலையங்கம் ஒன்றைத் தாங்கி வெளி வந்தது. “தமிழ் நாடு சுதந்தர நாடு ஆகவேண்டும்” இது தலைப்பு. இடம் 2 பக்கங்கள். "காங்கிரசுக்கு வெட்கம் மானம் வேண்டாமா? 48க்கு 139 ஆக வெற்றி