பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/475

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

474

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


பெற்றவர்களை, ரவிக்கையைக் கிழித்தான் வெங்காயத்தை உரித்தாள் சபாநாயகர் பிரச்சாரம் செய்தார் (ஆதித்தனாருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? 7, 8 மந்திரிகள் போகையில்) அரிசி கொடுக்க வில்லை- கருப்புக் கொடி காட்டியவர்களை அடித்தான் என்று - அளிச்சான் புளிச்சான் ஆட்டம் ஆடி, ஒழிக்கப் பார்ப்பதா வீரம்? காங்கிரஸ் சந்ததியையே புறமுதுகு காட்டும் பேடி வீரர்களாக அல்லவா ஆக்குகிறது? முதுகில் தட்டினால் பல்லு உதிர்ந்து போச்சு என்பது தானே இது? பிரிவினை முயற்சியை நசுக்கிவிடுவோம் என்று நம்மைப் பார்த்துச் சொல்கிறார்களே! புருஷனிடம் வாழ இஷ்டமில்லாமல் வெளியேறிய பெண்டாட்டியை, கோர்ட்டு அமீனாவை விட்டு, படுக்கை அறையில் தள்ளச் சொல்வது போல் அல்லவா இருக்கிறது இது!" - விஷயச் சுருக்கம் இவ்வளவே!

எஸ். எஸ். எல். சி. தமிழ்ப் பாட புத்தகத்தில் மறைமலையடிகளின் “தமிழ்த்தாய்“ என்ற கட்டுரை இடம் பெற்றுள்ளதை “மெயில்” ஏடு எதிர்த்து எழுதியது. இதை ”விடுதலை“ தலையங்கம் சுட்டிக் காட்டவே, தமிழுணர்வு படைத்த மக்கள், ஆரியப் பத்திரிகைகளைப் பேனா முனையால் தாக்கத் தொடங்கினர். இன்னொரு பேரிடியாகப் பழைமையாளர் மீது வீழ்ந்தது அரசாணை ஒன்று! இதையும் இந்து” விலிருந்துதான் “விடுதலை” சேகரித்தது. அதாவது, அரசு அலுவலகங்களில் கடவுள் படங்களை மாட்டி வைக்க்கூடாது என்பதே அது. இதுவும் அடுத்து வந்த நாட்களில் பெரிய கருத்து மோதலை ஏற்படுத்திற்று! அடுத்த அக்டோபர் 2 முதல் கலப்பு மணத் தம்பதியர்க்குத் தங்கப் பதக்கம் வழங்கப்படுமென அமைச்சர் சத்தியவாணி முத்துவால் அறிவிக்கப்பட்டது.

அரூரில் 12.7. 68 அன்று இரவு, பெரியார் 89வது பிறந்த நாளையொட்டி நடைபெற்ற விழாவில், எச். எல். முருகேசன் தலைமையில் பெரியார், முதல்வர் அண்ணாவுக்குப் பொன்னாடை போர்த்தினார். மாண்புமிகு அறிஞர் அண்ணா பெரியாரைப் பாராட்டிப் பேசினார்:- "பெரியாராவர்கள் மூலம் நாம் பெற்றிருக்கிற பகுத்தறிவுக்கு, நல்லறிவுக்கு நன்றிக் கடனைச் செலுத்துவதற்கு நாம் கூடியிருக்கிறோம். தமிழ்ச் சமுதாயத்திற்குச் செய்த தொண்டில் ஆயிரத்தில் ஒரு பங்கு பார்ப்பன சமுதாயத்திற்குப் பெரியார் செய்திருந்தாரானால், அவரைக் கடவுள் அவதாரமாக்கி, சங்கராச்சாரியரைவிட அதிக மதிப்பும் மரியாதையும் கொடுத்து, மிகப் பெரியவராக்கி இருப்பார்கள்.

ஈரோட்டுக்கருகிலுள்ள ஈங்கூரில் 30 ஆண்டுகளுக்கு முன் ஒரு பொதுக் கூட்டத்தில் பெரியார் பேசிக் கொண்டிருந்தார். கூட்டத்திலிருந்த ஒரு பெரியவர், பெரிய மூட்டை ஒன்றைக் கையில் வைத்துக் கொண்டு, அதிலிருந்த சாம்பலை அள்ளி அள்ளிக் காற்று வீசிய பக்கம்