பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/489

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

488

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


என் வணக்கத்தினைத் திருமதி மணி அம்மையார் அவர்களுக்குத் தெரிவிக்கவும். அன்பு வணக்கங்கள்.

நியூயார்க்

தங்கள் அன்புள்ள

10.10.68

அண்ணாதுரை

இந்தக் கடிதம் "விடுதலை" யில் 22.10.68 அன்று பிரசுரமாகியிருந்தது.

புதுவையில் முதலமைச்சராயிருந்த எம். ஓ.எச். ஃபாரூக் காங்கிரசை விட்டு விலகி 13.10.68 அன்று சென்னையில் கலைஞர் முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தார். சென்னை மாநகராட்சித் தேர்தல் முடிவுகள் 29.10.68 அன்று தெரிந்து விட்டன. தி.மு.க. 54, காங்கிரஸ் 52, முஸ்லீம் லீக் 7, சுதந்தரா 3, கம்யூனிஸ்ட் 1, உழைப்பாளர் கட்சி, தமிழ் அரசுக் கழகம் 1, பெரியார் இதில் குறை பாடுகள் நிலவக் கண்டார். 30-ந் தேதி தலையங்கத்தில் “காமராஜரைப் போல் அண்ணாவும் சென்னையில் இருக்க நேர்ந்து, பிரச்சாரம் செய்திருந்தால், தி.மு.க.வுக்கு மேலும் 10, 15 இடங்கள் கிடைத் திருக்கக்கூடும். அதனால்தான் இப்போது தி.மு.க.வுக்குத் தனிப் பெரும்பான்மை கிடைக்காது போயிற்று. உடனே தி.மு.க. குடும்பத்திற்குள் நல்லபடி பழுதுபார்த்துச் சீர்திருத்தம் சில செய்ய வேண்டும். அண்ணாவே தி.மு.கழகத்தின் சர்வாதிகாரியாக ஆகிவிட வேண்டும் தலைவருக்குக் கீழ்ப்படிதல், கொள்கைக்குக் கீழ்ப்படிதல், ஸ்தாபனத்துக்குக் கீழ்ப்படிதல் ஆகிய மூன்று வகையான கட்டுப்பாடு உணர்ச்சியும் தி.மு.க. உறுப்பினர்களுக்கு உண்டாக வேண்டும். இந்தத் தேர்தலில் அண்ணா-காமராஜர் ஒற்றுமை ஏற்பட்டால் தமிழர் இன நலனுக்கு உகந்ததாயிருக்கும். இதை இருசாராரும் மறக்கக்கூடாது. திராவிடர் கழகம் இந்தத் தேர்தலில் தோல்வி, என்று பத்திரிகைகளில் குறும்புத் தனமாக எழுதுகிறார்கள். எப்போதும் எந்தத் தேர்தலிலும் நிற்காதது திராவிடர் கழகம்! இரண்டுபேர் சுயேச்சையாக நின்றார்கள்; நல்ல வண்ணம் தோற்றார்கள்; அவ்வளவுதான்!" - என்று பெரியார் மனந்திறந்து வரைந்திருந்தார். மாநகராட்சியின் விசேஷ அதிகாரத்தில், தாழ்த்தப்பட்டோர், பெண்கள் போன்றாரை இணைத்துத் தி.மு.க. மாநகராட்சி உறுப்பினர் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்து, 'தனிப் பெரும்பான்மை பெற்றது.

அண்ணா அமெரிக்காவிலிருந்து 2.11.68 அன்று கிளம்பி, லண்டனில் இரண்டு நாள் தங்கி, 6ந் தேதி சென்னை வந்து சேர்ந்தார். தமிழகமே திரண்டு வந்து அவரை வரவேற்றுக் களித்தது. இதற்கு முன்னர் இவ்வளவு மாபெரும் வரவேற்பைச் சென்னை மாநகரம் கண்டதேயில்லை! உடல் இளைத்துப் பொலிவு குன்றிக் காணப்பட்டாலும், அண்ணா நலம் பெற்றுத் திரும்பினாரே எனத்