பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/493

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

492

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்



ஆனால் பெரியார் என்ன கருதினார், தமிழ் நாடு பெயர் மாற்றம் பற்றி? 6ந் தேதி தலையங்கம்."இந்தப் பிரச்சினை வெற்றி பெற்றதற்கு அண்ணாவின் ஆட்சிதான் காரணம். ஆனால் தமிழ் மக்களுக்கு இந்தப் பெயர் மாற்றத்தினால் என்ன பயன்? இது எப்படியிருக்கிறதென்றால், நமது ஆள் எதிரியிடம் உதை வாங்காமல் தப்பித்து வந்து விட்டான், என்பது போல்தான் இருக்கிறது. ஆசாமிக்குக் கண் பொட்டைதான்; என்றாலும் பெயர் கண்ணப்பன் என்பது போல் தோன்றுகிறது எனக்கு. இப்போதும், டில்லி ஆட்சி இந்தப் பெயர் மாற்றத்தை மறுத்திருந்தால் நம் கதி என்ன? ராஜினாமா செய்வோம். அது நமது பலவீனத்தைக் தானே காட்டுகிறது? எப்படியானாலும் இது மற்ற கட்சியாரால் செய்து முடித்திருக்க இயலாது என்பதை ஒத்துக்கொள்ள வேண்டியதுதான்! ஆயினும், இதற்கு "அண்ணாதுரை நாடு" என்பதாகப் பெயர் மாறினாலும், தமிழர்கள் அடிமை நாட்டில் அடிமையாக வாழ்வது மாற்றமடையுமா?" என்று வினவியது!

பூரிசங்கராச்சாரியாரின் திமிர்வாதத்துக்கு உதாரணமாக அவரே எழுதிய வாசகம் ஒன்று இதோ:- "சூத்திரர்கள் கிறஸ்தவர்கர், முஸ்லிம்கள் நாட்டுப் பற்றாளர் அல்லர். இந்தக் குழுவைச் சேர்ந்தவர்களால், சமைக்கப்பட்ட உணவை உண்ணுகின்ற மற்றவர்கள் சமைத்தவர் யாரென்பதைப் பற்றியே கவலை கொள்ளாமல் தின்றுவிடுகின்ற நாய், பூனை, போன்ற விலங்குகளுக்கு ஒப்பானவர்கள் " இந்த எழுத்துக்காக அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க இடமில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் சவான் கூறியது சரியல்ல: இ.பி.கோ.295A பிரிவின் படி நடவடிக்கை எடுக்கலாம் என “விடுதலை" 7.12.68 அன்று எடுத்துக் காட்டிற்று. புதுவை மாநில நகரசபைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி பெருவாரியாக வெற்றி பெற்றிருந்தது. ஃபாரூக் தொலைபேசியில் இதைக் கூறியபோது அண்ணா அவரை வெகுவாகப் பாராட்டினார்.

சென்னை மேயருக்கு நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்தில், பெரியாரும் வீரமணியும் பங்கேற்றுச் சிறப்பித்தனர். நீதிபதி பி.எஸ். கைலாசம் - திருமதி சௌந்தரா கைலாசம் ( ஒரு காலத்தில் இந்த அம்மையாரின் தாத்தா, பெரியாருக்கு அணுக்கத் தொண்டராம்) ஆகியோரின் மகள் நளினி - ராஜா சர் முத்தையச் செட்டியாரின் தங்கைமகன் சிதம்பரம் ஆகியோரின் திருமண விழாவில் பெரியார், மணியம்மையார். ஆளுநர், சர்தாரிணி உஜ்ஜல் சிங், பி.டி.ராஜன், நாவலர், கே.ஏ. மதியழகன், சி.சுப்ரமணியம், பி. வி. ராஜமன்னார் முதலியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மறு நாள் 11.12.68 “விடுதலை” யில் பெரியார் "இந்த வழிகாட்டித் திருமணத்திற்குச் செட்டி நாட்டரசர் போன்ற செட்டியார்கள் வந்து கவுரவித்திருக்க