பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/495

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

494

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


கேடாகும். எத்தனையோ பல வன்செயல்கள் தொடர்ந்து நடைபெற்று, இன்று கீழவெண்மணி போன்ற நடுங்கத்தக்க அக்கிரமம் வரை கொண்டு வந்து விட்டுவிட்டது. நம்முடைய நாடு மீண்டும் அரசநாயகமாகப் போக வேண்டும். அல்லது தனித்தமிழ் நாடு பிரித்துத் தரப்படவேண்டும். அல்லது அந்நிய ஆட்சி வேறு ஏதாவது வரவேண்டும். Patriotism is the last reguge of a scoundral-Dr.Johinson. தேசபக்தி என்பது அயோக்கியனின் கடைசிப் புகலிடம்-ஜான்சன்” - என்று வேதனையை வெளியில் காட்டும் தலையங்கம், பெரியாரால் 28.12.78 "விடுதலை" யில் எழுதப்பட்டது.

நாகர்கோயிலில் தேர்தல் பிரச்சாரத்துக்காகச் சென்ற இடத்தில், அமைச்சர் ஏ.கோவிந்தசாமி இரத்த வாந்தி எடுத்து, 6.1.69 அன்று அங்கேயே சிகிச்சை பெற்று. சென்னைக்குக் கொண்டு வரப்பட்டார். நம்முடைய அமைச்சர்களும், என்னைப் போலவே உடல் நலமில்லாதவர்களாகப் போய்விட்டார்களே என அண்ணா கவலைப்பட்டார் நாகரசம்பட்டியிலுள்ள உயர் நிலைப் பள்ளிக்குப் பெரியார் ராமசாமி கவர்ன்மெண்ட் (போர்டு) உயர் நிலைப்பள்ளி எனப் பெயர் மாற்றும் அரசு ஆணை 8.1.69 அன்று வழங்கப்பட்டது. பொங்கலன்று தியாகராய நகர் வாணிமகால் அருகே, கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனுடைய முழு உருவச் சிலையை, உடல் நலிவோடு அண்ணா திறந்து வைத்து உரையாற்றினார். இதனுடைய அவலங்கலந்த முக்கியத்துவம், அப்போது தெரியவில்லை! இந்த விழாவில் கலைஞர், எஸ்.எஸ். வாசன், ஏ.எல். சீனிவாசன், திலீப்குமார் ஆகியோரும் பங்கேற்றனர். 14.1.69 முதல் தமிழ் நாடு என்ற பெயர் புழக்கத்தில் வருவதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகளாக கே..நாராயணசாமி முதலியார், கே.எஸ். பழனிச்சாமி கவுண்டர், எஸ். கணேசன் (நாடார்) ஆகியோர் நியமனம் பெற்றனர்

காமராஜர் நாகர்கோயிலில் வெற்றி பெற்றதும், பெரியார் 11.1.69 அன்றே தலையங்கம் தீட்டிவிட்டார். “காமராஜர் ஜெயித்தார். தி.மு.க. (தேர்தலில் நிற்காவிட்டாலும்) தோற்றது. காமராஜர் 2,49,437. தோற்றவர் 1,21,236, இருந்தாலும், காங்கிரசைவிட தி.மு.க. பெரிய கட்சிதான்! அவர்களுடைய கெட்ட வாய்ப்பாக இப்போது இருந்து வருவது இராஜாஜியின் சம்பந்தம்தான். இது எப்படி என்றால் ஒரு படி அரிசியும் ஒரு படி உமியும் ஒன்றாய்க் கலந்து, உமியைப் புடைத்து ஊதித்தள்ளி, மீதியைச் சாப்பிடுவது போன்றதாகும். இதில் இப்போது எனக்குள்ள கவலை, நடக்க இருக்கும் நகரசபைத் தேர்தல்களிலும் தி.மு.க. வைப் பாதிக்குமே என்பதுதான். ஆகையால் அண்ணா அவர்கள் இதற்குப் பிராயச் சித்தம் தேடித், தோல்வியைச் சமாளிக்க