பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/504

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

503


பக்கமும் தூண்டிவிடுகின்றவர்கள் இருப்பார்கள். அவைகளுக்கு இணங்காமல், அருள் கூர்ந்து ஒன்றுபடுங்கள்" இது வேண்டுகோள் ஆனால் பலனளிக்கவில்லை; அப்போது

நாவலர் இல்லாததால் நான்கு பேர் புதிய அமைச்சர்களாக இனைணத்துக்கொள்ளப்பட்டார்கள். ப.உ. சண்முகம், சி.பா. ஆதித்தனார், கே.வி. சுப்பய்யா , ஓ.பி. இராமன் ஆகியோர். "மந்திரி சபை விஸ்தரிப்பு" என்ற பெட்டிச் செய்தியில், 13ந் தேதி பெரியார் எழுதியிருந்தார் - “புதிய மந்திரிகளை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். நாவலர் இருந்திருந்தால் இலாகா பிரிவினையும், அவர் இஷ்டப்படியே நடந்திருக்கும். ராஜிக்கே இடமில்லாமல் அவர் போய்விட்டதால், கலைஞர் அவர்கள் மிக்க ஜாக்கிரதையோடும், பொறுப்போடும் செய்திருக்கிறார். பலர் ஏமாற்றமடைந்திருக்கலாம். அவர்கள் செய்யும் எந்தவிதமான சலசலப்பும், முணுமுணுப்பும், எதிரிகளுக்குக் காட்டிக் கொடுப்பதோடு, 15 நாட்களுக்குள் அண்ணாவை மறந்துவிட்டதாகும்" என்று.

பெரியார் திருச்சிக்கு விரைந்தார். ஏன்? அவரிடமே மந்திரி பதவிக்காகப் பலர் சிபாரிசுக்கு வந்தார்களாம். சல சலப்புக் காட்ட வேண்டாம் என்று எழுதினாரே. காரணமாகத்தான்! அப்படியும் ஒருவருடைய முணுமணுப்பு வெளியில் வந்துவிட்டது. துறையூர் து.ப. அழகமுத்து, ஆளுங்கட்சிக் கொறடா, சொன்னதாகச் செய்தி பரவிற்று: “நான் மந்திரி பதவிக்கு ஆசைப்படுவதற்கு எனக்கு ஜாதியும் இல்லை ; படிப்பும் இல்லை " என்றாராம். பெரியார் இதையே குறிப்பிட்டு, 17ந் தேதி, “தமிழனின் பரிதாபநிலை” என்று தலையங்கம் எழுதினார். "ஜனநாயக ஆட்சியில் இன்னின்ன யோக்கியதாம்சம் உள்ளவர்தான் மந்திரியாக வரவேண்டும் என்று கிடையாது. இந்த 11பேர் கொண்ட தி.மு.க. மந்திரிசபையில் என்னைப் பொறுத்தவரை குறைபாடு இல்லை. கட்சியைக்கொண்டோ, ஆட்சியைக் கொண்டோ வாழ்க்கைக்கு வசதி செய்து கொள்ளாதவர்கள், அதிருப்தி காட்டமாட்டார்கள். இதுவரை அண்ணா செல்வாக்கால் பிணக்கு வெளிப்படையாய்த் தெரியமுடியவில்லை. அண்ணாவுக்கு மேல் - கட்சி நிலைப்பையும், பலப்படுத்தலையும் கவனித்து வந்தவரிடம் தலைமை போய்விட்டது. மந்திரி பதவிக்காக என்னிடம் சிபாரிசுக்கு வந்தவர்களிடம் சொல்லி விட்டேன், தி.மு.க. பற்றிப் பேச எனக்கு உரிமை இல்லை என்பதை." அய்யாவிடம் இரகசியம் தங்காது என்பதை அந்தப் பலரும் புரிந்திருப்பார்கள்!

நெய்வேலியில் புராணப் பிரசங்கம் செய்ய அடிக்கடி செல்கின்ற கிருபானந்தவாரியார். “தெய்வ நிந்தனை செய்ததால் அண்ணாவுக்குப் புற்றுநோய் ஏற்பட்டு மரண மடைந்தார்” என்று-ரமண மகரிஷியை மறந்து-பேசியிருக்கிறார். கழகத்தோழர்கள் கனன்றெழுந்து, அவரைச்