பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/505

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

504

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


குழந்து கொண்டு, அவரிடம் மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கினார்களாம், 18ந் தேதியன்று. இதைக் குறித்துப் பலவிதமான செய்திகள், நம் நாட்டுப் பத்திரிகா தர்மத்திற்கேற்ப, வெளியாயின. "யோக்கிய மற்ற கூப்பாடுகள்" என்று 24ம் தேதி பெரியாரே தலையங்கம் தீட்டிட நேரிட்டது. " கிருபானந்த வாரியாருக்குப் புத்திகற்பித்ததற்காக, உலகமே முழுகிவிட்டது போல் கூப்பாடு போடுகிறார்களே இந்த மாதிரி அவர் மன்னிப்புக் கேட்டது, இது முதல் தடவையும் அல்லவோ! 1944-ல் தொடங்கி நமது தோழர்கள் அவர்மீது பலதடவை பகுத்தறிவுக் கணைகளை வீசி, மடக்கியிருக்கிறார்களே இவரே பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை என்னோடு ரயிலில் இரண்டாம் வகுப்பில் கோயமுத்தூர் வரை பிரயாணம் செய்தார். நான் அவரைச் சந்தித்தது அப்போதுதான்! தங்கள் ஆட்கள் என்னைத் தவறாக நினைக்கிறார்கள். நான் ஏதோ வயிற்றுப் பிழைப்புக்காக இந்தப் பிரசங்கம் செய்து வருகின்றேன். நான் தமிழர் விரோதியல்ல; எதையும் தவறாகக் கூறமாட்டேன். உறுதி என்று என்னிடம் சொன்னவர்தானே!

இராஜாஜி ஒரு கூட்டத்தில் பேசும்போது சூத்திரன் என்று சொல்லிவிட்டார். பக்கத்திலிருந்த காமராஜருக்குக் கோபம் வந்து முதலில் இதை வாபஸ் வாங்கிவிட்டுப் பிறகு பேசுங்கள் என்றார். அவரும் அதன்படியே செய்தார். ஆகையால் இதில் ஒன்றும் தவறில்லை .

இன்று நாடெங்கும் காலித்தனங்கள், அமளிகள், கலாட்டாக்கள் நடக்கின்றன. நாட்டிற்கு வந்த சுதந்திரத்தால் பெரும்பான்மையான மக்களுக்கு உரிமையில்லை. நாட்டை ஆள்பவர்களுக்கு எதற்கும் அதிகாரமில்லை. கோழிப் பண்ணையில் கோழிகள் அடைக்கப்பட்டு இருப்பது போல், மனிதப் பண்ணையில் மனிதனாக நாம் இருந்து வருகிறோம்.

காலித்தனங்கள் ஒழிக்கப்பட வேண்டுமானால் முதலில் பத்திரிகை அதிபர்கள் யோக்கியர்களாக இருக்க வேண்டும். என்ன செய்தாவது பத்திரிகை சர்க்குலேஷன் குறையாமல் இருக்க வேண்டும் என்பதில்தான் இவர்களுக்குக் கவலை எல்லாம், எப்படி என்றால், தேவதாசி முறை இருந்த காலத்தில், எப்படி ஒரு மனிதன் தாய், தங்கை, மகளுக்கும் நாயகன் தேடும் பணியில் ஈடுபட வேண்டியிருந்ததோ அது போல, நாட்டில் சமதர்மம் வேண்டுமென்று சொன்னால், யோக்கியனும் அயோக்கியனும் ஒன்றாகி விடுவதா? மனிதனை மனிதன் செருப்பால் அடித்தால், வலி பொறுக்காமலா கதறுகிறான்? மானக்கேட்டுக்கு ஆகத் தானே? அந்த மாதிரி இப்போது தமிழர் பத்திரிகைகளும் ஈன நிலைக்குப் போய்விட்டன."

பெரியார் 16.2.69 அன்று மேலக்கற்கண்டார் கோட்டையில் பேசும்போது, சென்னை உயர்நீதி மன்றத்தில் இப்போது உள்ள 16