பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/506

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

505


நீதிபதிகளில் 10பேர் தமிழர்கள் என்று கூறிப் பூரிப்படைந்தார். தமிழகச் சட்ட மன்றத்தின் துணைச் சபாநாயகராக எட்மண்டு பெர்னாண்டோ தேர்ந்தெடுக்கப்பட்டார். கலைஞரின் அமைச்சரவையை வரவேற்றும், கலைஞரின் தனிப்பட்ட திறன், ஆற்றல் இவற்றைப் பாராட்டிப் மகழ்ந்தும் "ஆனந்த விகடன்" எழுதிய தலையங்கத்தை, “விடுதலை 20. 2.69 அன்று வெளியிட்டிருந்தது. நாகரசம்பட்டி என்.எஸ். சம்பந்தம் இளவல் என். எஸ். ஏகாம்பரம் பி.ஈ. -டாக்டர் சரோஜினி எம்.பி.பி.எஸ். இவர்களின் கலப்புத் திருமணத்தையொட்டி நடந்த வரவேற்பு விழாவில் 20.2.69 அன்று, பெரியார் மணியம்மையாரால் அழைக்கப்பட்டுக், கலைஞரும் பிறரும் வந்திருந்து, பெரியார் திடலில் பாராட்டிப் பேசினர். சென்னை மாநகராட்சி உறுப்பினர்களால், தமிழகச் சட்டமன்ற மேலவைக்குத் திருமதி ராணி அண்ணா 2.3.69 அன்று உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மார்ச் 3-ஆம் நாள் தலையங்கம் “தமிழர் நிலை ஊர் சிரிக்கிறதே" என்பது. பெரியார், தமிழர்களே இப்படி ஒருவர்மீது மற்றவர் சேற்றை வாரி இறைத்துக் கொள்கிறார்களே; இதனால் பார்ப்பனர் நிர்வாணமாய் ஆட்டம் போடுவரே; மேலும் மக்கள் ஆதரவும் குறைந்து போய்விடுமே; இதனால் அரசியலில் ஏதாவது ஆதாயம் கிட்டலாமே ஒழிய, மனிதப் பண்பு வளராதே- என்று கவலைப்பட்டிருந்தார். சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரான கருத்திருமன். வெளியில் தலைவரான சி.சுப்ரமணியம் ஆகியோர், தி.மு.க. அரசு மீது குற்றஞ் சுமத்துவதையும், இதற்குப் பதில் சொல்லக் கலைஞர், ஆதித்தனார் போன்றோர் முனைவதையுமே பெரியார் குறிப்பிட்டிருந்தார். அடுத்த 5ந் தேதி “அரசாங்கம் கவனிக்க வேண்டும்" என்ற தலைப்பில் நல்ல அறிவுரை ஒன்றை வலியுறுத்தினார். “தி.மு.க. ஆட்சி ஒவ்வொரு பதவி, உத்தியோகம் பற்றிக் கையெழுத்துப் போடும் போதும் இந்த ஆள் பார்ப்பானா, கிறிஸ்துவனா, முஸ்லீமா, சைவனா, மலையாளியா, தமிழனா என்பதைப் பார்த்துத் தான் கையெழுத்துப் போட வேண்டும். காமராஜர் தமிழனுக்குக் கல்விக் கண் கொடுத்தார். ஆனால் கண்ணிருந்தும் குருடராயிருப்பதில் பயனில்லை. ஆகையால் தி.மு.க. ஆட்சி தமிழர்களை எழுந்து நடக்கச் செய்ய ஆவன செய்திட வேண்டும். கண்டிப்பாய் இதில் கவனம் செலுத்திட வேண்டும்."

9.3.69 அன்று திருவரங்கத்தில் திருச்சி மாவட்ட சமுதாய சீர்திருத்த மாநாடு வீரமணி தலைமையில் நடந்தது. செல்வேந்திரன் திறந்து வைக்க, வீரப்பா கொடி ஏற்றினார். பாட புத்தகங்களில் மூடநம்பிக்கைக் கதைகளை அகற்றல், கோயில் கருவறை நுழைவு, வானொலியின் அறிவுக்குப் புறம்பான ஒலிபரப்பு, கோயில் சொத்துகளை நாட்டுடமை ஆக்கல், காலாண்டு சிவில் லிஸ்ட் பிரசுரித்தல் ஆகியவை பற்றித் தீர்மானங்கள் இயற்றப்பட்டன.