பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/508

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

507


மதிக்காமல் பேசினால், அவரையும் இப்படித்தான் நான் கண்டிப்பேன் உள் விவகாரம் என்ன என்பது எனக்குத் தெரியாது. கட்சியின் கவுரவத்தைக் காப்பது தலைவரின் கடமை. தி.மு.க. இனியும் கறைந்தது 2 பீரியட் (Period) பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும். தி.மு.க. என்னை மதித்தாலும் மதிக்காவிட்டாலும், அவர்கள் என்னை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தி.மு.க. வைப் பாதுகாப்பதில் அண்ணா எனக்குப் பங்கு ஏற்படுத்திவிட்டார். அதற்காகத்தான் நிபந்தனையற்ற unreserved தொண்டு ஆற்றி வருகிறேன். தி.மு.க.வில் சிலருக்கு ஜாதி உணர்ச்சி, வகுப்பு உணர்ச்சி, படிப்பு உணர்ச்சி, பண உணர்ச்சி இருக்கிறது. தம்மையே மறக்கும் படியான அளவுக்குப் பதவி உணர்ச்சி, பொறாமை உணர்ச்சி இருக்கிறது. இவற்றையெல்லாம் மறந்து விட்டு இனஉணர்ச்சி ஒன்றை மட்டும் பெறவேண்டும். இதற்காக எதையும் விட்டுக் கொடுக்கும் துணிவும் தாராளமும் வேண்டும்!" என்று பெரியார், உரிமையுடன், உருக்கமுடன் எழுதியிருந்தார். காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் அமைச்சர் ப.உ.சண்முகம் தலைமையில், பெரியார் அண்ணா படம் திறந்தார். “தி.மு.க. கழகம் பிரிந்தவுடன் நான் அண்ணாவை ரொம்பக் கண்டித்தேன். குறை சொல்லிக் கொண்டேயிருந்தேன். எதற்குமே பதில் சொல்லாமல், மாறாக என்னைப் புகழ்ந்து பேசிவந்தார் அண்ணா! இந்த உயர்வான பண்பைப் பாராட்டித்தான், மக்கள் அவரை அன்போடு ஆட்சிக்கு அனுப்பிளார்கள். என்னுடன் இருந்த காலத்திலும்கூட நாங்கள் இருவரும் கூட்டத்திற்குச் சென்றால், அண்ணாவைப் பேசச் சொல்லுங்கள் என்று தான் மக்கள் பிரியமுடன் கேட்பது வழக்கம்", என்று புகழ்ந்துரைத்தார் பெரியார்.

அண்ணா திராவிடநாடு பிரச்சினையை ஒரு ஏற்பாடு செய்து ஒதுக்கி வைத்திருக்கிறார்; அடியோடு கைவிடவில்லை என்பதற்காக ஏ.வி.பி. ஆசைத்தம்பி, திருவரங்கத்தில், ஒரு சம்பவம் பற்றிக் குறிப்பிட்டார். அரசாங்கத்துக்குச் சேரவேண்டிய அபராதத் தொகையினை வசூலிக்க அண்ணா வீட்டில் சோபாவையும், கருணாநிதி ஆபீசில் பேப்பரையும், சம்பத் வீட்டில் சாமானையும் கைப்பற்றி விட்டு, என் வீட்டுக்கும் வந்து, ஏதோ சோபாவை எடுத்தார்கள். " இதை நீங்கள் தொடமுடியாது! எல்லாம் என் மனைவிக்குச் சொந்தம்" என்றேன், “உங்கள் பேரில் என்னதான் இருக்கிறது?" என்றார்கள், “என்னுடைய எம்.எல். ஏ. சம்பளத்தில் அட்டாச் செய்து கொள்ளுங்கள்" என்றேன். சென்றார்கள்; அதில் அட்டாச் செய்ய முடியாது என்பது தெரியாமல், கடைசியில், என்னிடமிருந்து அபராதத் தொகையே வசூல் செய்ய முடியவில்லை. அப்படியானால் நான் என்ன பாப்பரா? இல்லை . அப்படி ஓர் ஏற்பாடு; யாரும்